Advertisement

ஜனவரி 26 பட்டியலில் இணைந்துள்ள படங்கள்

       பதிவு : Jan 20, 2018 10:35 IST    
january 26 release tamil movie january 26 release tamil movie
Advertisement

இயக்குனர் சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டிக் டிக் டிக்'. இந்த படம் இந்தியாவின் முதல் விண்வெளி சார்ந்த படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இந்த படத்தில் ஜெயம் ரவி மேஜிக் மேன் கதாபாத்திரத்தை முதல் முறையாக கையாண்டுள்ளார். இவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் இணைந்துள்ளார். இவர்களுடன் ஜெயபிரகாஷ், அருண், மன்சூர் அலி கான் போன்றவர்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தின் மூலம் ஜெயம் ரவி அவரது மகன் ஆரவ் ஜெயம் ரவியை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார். இந்நிலையில் படத்தில் இருந்து வெளிவந்த போஸ்டர், டீசர், ட்ரைலர் போன்றவை ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் வரவேற்கப்பட்டு வருகிறது . மேலும் இப்படத்தினை தெலுங்கிலும் வெளியிட உள்ளனர்.          

இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் கடந்த 2016ம் ஆண்டில் வெளிவந்த 'மகேஷிண்டே பிரதிகாரம்' என்ற மலையாள படத்தின் ரிமேக்காக 'நிமிர்' படம் உருவாகியுள்ளது. இந்த ரீமேக் படத்தில் நாயகனாக நடிகர் உதயநிதி ஸ்டாலின் இணைந்துள்ளார். முன்சாண்ட் என்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் சந்தோஷ் டி குருவில்லா தயாரிக்கும் இப்படத்தில் நமீதா, பார்வதி நாயர், சமுத்திரக்கனி, எம்.எஸ்.பாஸ்கர், இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தில் இருந்து இது வரை வெளிவந்த போஸ்டர், டீசர், ட்ரைலர், இசை போன்றவை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருவதோடு படத்தின் எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.      

 

அருந்ததி, ருத்ரம்மாதேவி, பாகுபலி 1&2  போன்ற சரித்திர படங்களில் நடித்த நடிகை அனுஷ்கா தற்போது 'பாகமதி ' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை இயக்குனர் ஜி.அசோக் என்பவர் இயக்க யுவி கிரியேஷன் மற்றும் ஸ்டுடியோ க்ரீன் சார்பில் வம்சி கிருஷ்ண ரெட்டி பிரமாண்டமான முறையில் தயாரித்து வருகிறார். கடந்த நாட்களில் வெளிவந்த போஸ்டர், டீசர் போன்றவைக்கு ரசிகர்களிடம் வெகுவான வரவேற்பு கிடைத்திருந்தது. இந்த டீசரின் முடிவில் அனுஷ்காவின் வசனம் பெருமளவில் ஹிட் அடித்து வருகிறது. இதனை தொடந்து இப்படத்தின் இசையை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார். இப்படத்தின் பாடல்களும் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. மேலும் இந்த படத்தில்  எஸ்.தாமன் இசையமைக்கிறார். இவருடன் இணைந்து ஆர்.மதி ஒளிப்பதிவு பணியில் ஈடுபட்டுள்ளார். ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் இப்படத்தில் ஆதி, ஜெயராம், உன்னி முகுந்தன், ஆஷா சரத் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் 

இயக்குனர் பூபதி பாண்டியன் இயக்கத்தில் நடிகர் விமல் நடிப்பில் உருவாகி வரும் படம்  'மன்னர் வகையறா'. இந்த படத்தினை விமல் தனது 'அரசு ஃபிலிம்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் அவரே தயாரித்து வருகிறார். இந்த படத்தின் மூலம் அதிரடி தில்லர், காதல், காமெடி போன்ற பல காட்சிகளில் விமல் ஈடுபட்டுள்ளார். அதிரடியை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் விமலுக்கு ஜோடியாக  ‘கயல்’ ஆனந்தி, சாந்தினி தமிழரசன் என இரு நாயகிகள் நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் இணைந்து பிரபு, சரண்யா பொன்வண்ணன், கார்த்திக் குமார், நாசர், ஜெயப்பிரகாஷ், ரோபோ சங்கர், யோகி பாபு, நீலிமா ராணி போன்ற திரைப்பட வட்டாரங்கள் இணைந்துள்ளனர். மேலும் இப்படத்தில் இருந்து வெளியான போஸ்டர், டீசர், இசை போன்றவை ரசிகர்களிடம் பெரிதும் வரவேற்கப்பட்டு வருகிறது.       

 


 


ஜனவரி 26 பட்டியலில் இணைந்துள்ள படங்கள்


செய்தியாளர் பற்றி

விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்களிலும் அதிகளவு ஆர்வம் உடையவர். தற்பொழுது மக்களிடையே நிலவி வரும் சமூக வலைதளம், சினிமா தொடர் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். அரசியல் சார்ந்த செய்திகளை அடியோடு வெறுப்பவர். சில நேரங்களில் ஓவியம் வரைதல், சிறந்த நாவல்களை படித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். கடவுள் நம்பிக்கை உடையவர். நாளுக்கு நாள் வெளிவரும் புது புது சினிமா (திரைப்படம் ) சார்ந்த செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்பவர். ... மேலும் படிக்க

ratiga

ராதிகாஎழுத்தாளர்

Advertisement