ads

ஜெயம் ரவியின் புது பட தலைப்பு

adanga maru new movie title

adanga maru new movie title

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் தற்பொழுது உருவாகியுள்ள படம் 'டிக் டிக் டிக்'. இந்த படம் இந்தியாவின் முதல் விண்கலம் படம் என்பதால் அனைவரிடமும் பாராட்டுகளை பெற்று வருவதோடு எதிர்பார்ப்புகளையும் அதிகரித்துள்ளது. இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் எழுத்து இயக்கதில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தினை வருகிற குடியரசு தினத்தினை முன்னிட்டு வெளியிட உள்ளனர்.  இதற்கு அடுத்த படியாக ஜெயம் ரவி, சுந்தர் சி  இயக்கத்தில் வரலாற்று சார்ந்த படமான சங்கமித்ராவில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரலில் துவங்கவுள்ளது. 

இந்நிலையில் ஜெயம் ரவியின் 24வது படத்திற்கான அறிவிப்புகள் சில நாட்களுக்கு முன்பு வெளிவந்தது. இந்த படத்தினை புதுமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கவுள்ளார். மேலும்  'விக்ரம் வேதா' புகழ் சாம்.சி.எஸ் இசையமைக்கும் இப்படத்தில் சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்ய  ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். இந்நிலையில் படத்தின் தலைப்பிற்காக காத்திருந்த ரசிகர்களுக்கு அதிகார பூர்வமாக 'அடங்க மறு' என்ற டைட்டிலை வைத்து  வெளியிட்டதோடு படப்பிடிப்புகளை இன்று துவங்கவிருப்பதாக படக்குழு செய்தியை வெளியிட்டுள்ளது. 

ஜெயம் ரவியின் புது பட தலைப்பு