ads

ஜெயம் ரவியின் 26வது பட தகவல்

mani seiyon to direct jayam ravi 26th film

mani seiyon to direct jayam ravi 26th film

சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் விண்வெளி சார்ந்த படமான 'டிக் டிக் டிக்' படத்தினை தொடர்ந்து ஜெயம் ரவி தனது 24வது படத்தினை புதுமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ‘அடங்க மறு’ என்ற படத்தில் காவல் துறை அதிகாரியாக நடித்து வருகிறார். இதற்கு அடுத்ததாக தனது 25வது படத்தினை இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் உருவாக்கவிருப்பதாக தகவலை முன்னதாகவே வெளியிட்டிருந்தார். மேலும் அக்க்ஷய் குமார் நடிப்பில் ஹிந்தி திரையுலகில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற 'பேபி' படத்தின் ரீமேக்கில் நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஒரு புது படத்தில் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வந்துள்ளது. 

இந்த புது படத்தினை இயக்குனர் மணி செய்யோன் இயக்கவுள்ளார். இவர் கடந்த 2017ம் ஆண்டில் சிபி ராஜ் நடிப்பில் வெளிவந்த 'கட்டப்பாவ காணோம்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக  அறிமுகமானார். மீனை மையமாக வைத்து உருவாக்கிய இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், காளி வெங்கட், லிவிங்ஸ்டன், யோகி பாபு உட்பட திரைப்பட நட்சத்திரங்கள் இணைந்திருந்தனர். காமெடியை மையமாக வைத்து உருவாக்கிய இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இயக்குனர் அறிவழகனின் இணை இயக்குனராக பணிபுரிந்த மணி செய்யோன் இந்த வெற்றி படத்தினை தொடர்ந்து ஜெயம் ரவியின் அதிரடி படத்தினை இயக்கவுள்ளாராம்.     

நடிகர் ஜெயம் ரவி இதற்கு அடுத்த படியாக ‘என்றென்றும் புன்னகை’ புகழ் அஹமத் இயக்கவிருக்கும் இன்னும் பெயரிடப்படாத ஒரு புதிய படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்த ஆண்டில் ஜெயம் ரவி பல புது படங்களில் ஒப்பந்தமாகி ரசிகர்களை மிரளவைக்கும் புது புது கெட்டப்பில் வளம் வர உள்ளார். 

ஜெயம் ரவியின் 26வது பட தகவல்