ads

செக்க சிவந்த வானம் படத்தில் ஜிமிக்கி கம்மல் அப்பாணி சரத்

jimikki kammal fame appani sarath in chekka chivantha vaanam movie

jimikki kammal fame appani sarath in chekka chivantha vaanam movie

மலையாள நடிகரான அப்பாணி சரத், கடந்த ஆண்டு வெளியான 'அங்கமாலி டைரிஸ்' என்ற படத்தில் 'அப்பாணி ரவி' என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இதனை அடுத்து நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியான 'வெளிபாடிண்டே புஸ்தகம்' படத்தில் நடித்ததன் மூலம்  கடந்த சில மாதங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியான 'அங்கமாலி டைரீஸ்' படத்தில் மாணவராக 'பிராங்கிளின்' கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தில் இடம்பெற்ற 'ஜிமிக்கி கம்மல்' பாடலில் நடனமாடியதன் மூலம் தமிழ் மற்றும் பிற மொழிகளிலும் தற்போது பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இவர் தற்போது தமிழில் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்து வரும் 'சண்டக்கோழி 2' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இயக்குனர் ராஜூ முருகன் கதையில் புதுமுக இயக்குனர் சரவணன் ராமச்சந்திரன் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகர்களில் ஒருவராக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்நிலையில் தற்போது இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'செக்க சிவந்த வானம்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த படத்தில் நடிகர் சிம்பு, விஜய் சேதுபதி, அருண்விஜய், அரவிந்த் சாமி, நயன்தாரா, அதிதி ராவ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். மேலும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இயக்குனர் மணிரத்னம் படத்தில் விரைவில் நடிக்க உள்ள அப்பாணி சரத் தற்போது மோகன்லால் நடித்து வரும் 'ஓடியன்' படத்தில் நடித்து வருகிறார்.

செக்க சிவந்த வானம் படத்தில் ஜிமிக்கி கம்மல் அப்பாணி சரத்