ads

மோகன்லாலின் ஓடியன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

mohanlal upcoming odiyan release from october 18th

mohanlal upcoming odiyan release from october 18th

மலையாள முன்னணி நடிகரான மோகன்லால் கடந்த ஆண்டு வெளிவந்த 'வில்லன்' படத்தின் வெற்றியை தொடர்ந்து புதுமுக இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் இயக்கத்தில் 'ஓடியன்' படத்தில் நடித்து வருகிறார். இவர் விளம்பர படங்களை பல இயக்கியதை தொடர்ந்து தற்பொழுது ஓடியன் படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். மேலும் இப்படத்தில் மோகன்லால் உடல் எடையை குறைத்து மெலிதான தோற்றத்தில் 30 வயதுடைய இளைஞன் கதாபாத்திரத்தை கையாண்டு வருகிறாராம். சமீபத்தில் மோகன்லால் மேற்கொண்டுள்ள இளமை தோற்றத்தின் புகைப்படம் வலைத்தளத்தில் பரவி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

கேரளா பகுதியில் முன்பு வாழ்ந்ததாக கருதப்படும் ஓடியன் மாணிக்யன் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாகிவருகிறது. ஒடியன் என்பவன் தமிழக மலைவாழ் பழங்குடி மக்களின் நம்பிக்கைப்படி தீய ஆற்றல்கள் கொண்ட ஒரு மனிதன் ஆவார். மேலும் உருமாறும் சக்தி கொண்டவர் என்றும் நம்பப்படுகிறது. இந்த ஓடியன் மாணிக்யன் கதாபாத்திரத்தை மோகன்லால் மேற்கொண்டு வருகிறார். இவருடன் இணைந்து மஞ்சு வாரியார், பிரகாஷ் ராஜ், சித்திக், இன்னோசென்ட் போன்றவர்கள் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.     

ஸ்ரீ குமார் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இறுதி கட்ட படப்பிடிப்பை பாலக்காடு பகுதியில் படக்குழு  துவங்கியிருக்கிறது. இந்நிலையில் படத்தினை வருகிற அக்டோபர் மாதம் 18ம் தேதியில் வெளியிடுவதாக தகவல் வந்துள்ளது. இந்த தகவலின் அதிகார பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்க்கப்படுகிறது. மேலும் இப்படத்தில் இசையமைக்கும் பணியில் ஜெயச்சந்திரன் ஈடுபட பின்னணி இசையில் 'விக்ரம் வேதா' புகழ் சாம் சி.எஸ் மேற்கொண்டு வருகிறார்.     

மோகன்லாலின் ஓடியன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு