ads

ஒரு வழியாக தொடங்கியது சபாஷ் நாயுடு படப்பிடிப்பு

விஸ்வரூபம் 2, இந்தியன் 2 படங்களுக்கு பிறகு கமல் ஹாசன் நடிப்பில் சபாஷ் நாயுடு, மருதநாயகம் போன்ற படங்கள் உருவாக வுள்ளது. இதில் சபாஷ் நாயுடு படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது துவங்கயுள்ளது.

விஸ்வரூபம் 2, இந்தியன் 2 படங்களுக்கு பிறகு கமல் ஹாசன் நடிப்பில் சபாஷ் நாயுடு, மருதநாயகம் போன்ற படங்கள் உருவாக வுள்ளது. இதில் சபாஷ் நாயுடு படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது துவங்கயுள்ளது.

நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான கமல் ஹாசன் நடிப்பில் தற்போது விஸ்வரூபம் 2, இந்தியன் 2 போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இதில் விஸ்வரூபம் 2 படத்தின் பணிகள் நிறைவடைந்து விரைவில் திரையரங்குகளில் வெளிவரும் என எதிர்பார்க்க படுகிறது. கமல் ஹாசன் ராணுவ அதிகாரியாக நடித்துள்ள இந்த படம் சுதந்திர தினத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து கமல் ஹாசன் அடுத்ததாக பிரமாண்ட இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் இந்தியன் 2வில் இணைந்துள்ளார்.

தற்போதைய சூழலுக்கேற்ப அரசியல், வங்கி ஊழல் போன்றவற்றை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் பணிகளும் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. முன்னதாக இந்த படத்தில் கமல் ஹாசனுடன் இணைந்து நயன்தாரா மற்றும் வைகைப்புயல் வடிவேலு நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. சினிமா, அரசியல் இரு துறைகளிலும் கவனம் செலுத்தி வரும் கமல்ஹாசன் நடிப்பில் அடுத்ததாக சபாஷ் நாயுடு, மருத நாயகம் போன்ற படங்கள் மட்டுமே வெளிவர உள்ளது.

இதன் பிறகு தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதில் கமல் ஹாசன் இயக்கத்தில் உருவாக உள்ள 'சபாஷ் நாயுடு' படம் 'தசாவதாரம்' படத்தின் 'பலராம் நாயுடு' கதாபாத்திரத்தை வைத்து உருவாக உள்ளது. இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் போன்ற அனைத்து பணிகளையும் கமல் ஹாசன் மேற்கொண்டுள்ளார்.

லைக்கா ப்ரொடக்சன் மற்றும் ராஜ்கமல் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் ஸ்ருதி ஹாசன், ரம்யா கிருஷ்ணன், மனு நாராயண், ஜேசன் ஜா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பும் தற்போது துவங்கியுள்ளது. இந்த படத்தின் ஸ்ருதி ஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க உள்ளனர். இவர் தற்போது நடிகர் வித்யுத் ஜம்வாலுடன் இணைந்து ஒரு கேங்ஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்த பிறகு கமல் ஹாசன் இயக்கி, தயாரித்து, நடிக்கும் சபாஷ் நாயுடு படத்தில் நடிக்க உள்ளார்.

ஒரு வழியாக தொடங்கியது சபாஷ் நாயுடு படப்பிடிப்பு