ads
நரகாசூரன் படத்தின் புதிய தகவலை வெளியிட்ட கார்த்திக் நரேன்
ராதிகா (Author) Published Date : Feb 03, 2018 10:25 ISTபொழுதுபோக்கு
கடந்த 2016ம் ஆண்டில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வெற்றியை பெற்ற க்ரைம் த்ரில்லர் படமான 'துருவங்கள் பதினாறு' படத்தின் மூலம் கார்த்திக் நரேன் இயக்குனராக திரையுலகில் அறிமுகமானார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. மேலும் இப்படத்தின் மூலம் கார்த்திக் நரேன் சிறந்த இயக்குனருக்கான விருதையும் பெற்றிருந்தார். இந்த வெற்றி படத்தினை தொடர்ந்து தற்பொழுது இவர் இயக்கிவரும் அதிரடி த்ரில்லர் படமான 'நரகாசூரன்' படத்தில் 'தனி ஒருவன்' அரவிந்த் சாமி, சந்தீப் கிஷன், மலையாள நடிகர் இந்திரஜித், ஸ்ரேயா, மிசையமுறுக்கு நாயகி ஆத்மிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
'ஷர்தா எண்டர்டெயின்மெண்ட்’ தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து இயக்குனர் கவுதம் மேனன் தனது 'ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட்’ தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் கவுதம் மேனன் தயாரித்து வரும் இப்படத்தினை தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாக்கி வருகின்றனர். மேலும் கன்னட மொழியில் வெளியிடவும் திட்டமிட்டிருப்பதாக தகவல் வந்துள்ளது. இப்படத்தில் 'மாயா' புகழ் ரான் எத்தன் யோஷான் இசையமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். மேலும் இவருடன் சுஜித் சாரங் ஒளிப்பதிவு பணியையும் ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு பணியையும் மேற்கொண்டுள்ளனர்.
விறுவிறுப்பாக ஊட்டி பகுதியில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்து படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. தற்பொழுது போஸ்ட் - ப்ரொடெக்சன் பணியில் ஈடுபட்டு வரும் படக்குழு படத்தின் பின்னணி இசையமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனராம். இந்த தகவலை படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன் மற்றும் இசையமைப்பாளர் ரான் எத்தன் யோஷான் அவர்களது ட்விட்டரில் பதிவு செய்து தகவலை வெளியிட்டதோடு பின்னணி இசையில் ஈடுபட்டு வரும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.
Symphony orchestra for #Naragasooran at Macedonia. Music director @RonYohann is coming up with soulful & haunting sound tracks. Film is nearing completion. Excited :) pic.twitter.com/LS83qYbd8C
— Karthick Naren (@karthicknaren_M) February 2, 2018
Blessed beyond words ! Day 1 - Strings #Naragasooran scoring session with the Macedonian symphony Orchestra. Excited for you all to hear the score ! 😊@karthicknaren_M @OndragaEnt @badrikasturi pic.twitter.com/dxpxwuz5dR
— Ron Ethan Yohann (@RonYohann) February 2, 2018