நயன்தாராவின் புது படத்தில் இணையும் 8 தோட்டாக்கள் பிரபலம்

       பதிவு : Feb 09, 2018 12:32 IST    
ks sundaramurthy team up nayanthara new film ks sundaramurthy team up nayanthara new film

'அறம்' படத்தின் மூலம் அதிகளவு ரசிகர்கள் வட்டாரத்தை பிடித்ததோடு இப்படத்தின் மூலம் 'லேடி சூப்பர் ஸ்டார்' என பட்டமும் ரசிகர்களால் நயன்தாராவிற்கு கிடைத்திருந்தது. இந்த வெற்றி படத்தினை தொடர்ந்து நயன்தாரா ஒரு புது படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் கடந்த நாட்களில் வெளிவந்தது. இந்த படத்தினை புதுமுக இயக்குனர் சர்ஜுன்.கே.எம் இயக்கவுள்ளார். இவர் 'லக்ஷ்மி, மா' என்ற குறும்படங்களை இயக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் சத்யராஜ் மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ என்ற படத்தை சர்ஜுன்.கே.எம் தற்பொழுது இயக்கி வருவது முன்னதாகவே வெளிவந்த தகவல்.

அறம் படத்தினை தயாரித்த ‘KJR ஸ்டுடியோஸ்' தயாரிப்பு நிறுவனம் சார்பில் கோட்டபாடி ராஜேஷ் தற்பொழுது நயன்தாரா நடிக்கவுள்ள இந்த புது படத்தினையும் தயாரிக்கவுள்ளார். இந்த நிறுவனம் முதல் முதலாக அறம் படத்தினை தயாரித்து திரையுலகில் சிறந்த தயாரிப்பு நிறுவனமாக அறிமுகமானது. அதன் பின்னர் பிரபு தேவாவின் 'குலேபகாவலி' படத்தினை தயாரித்தது. தற்பொழுது இந்த நிறுவனத்தின் மூன்றாவது படமாக மீண்டும் நயன்தாரா கூட்டணியில் இணைந்துள்ளது.       

 

ப்ரீ -ப்ரொடெக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்நிலையில் படத்தின் இசையமைப்பாளராக ‘8 தோட்டாக்கள்’ புகழ் கே.எஸ்.சுந்தரமூர்த்தி இணைந்துள்ளார். இந்த தகவலை அவரே  ஃபேஸ்புக் மூலம் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படத்தில் இணையவுள்ள இதர நடிகர் -நடிகைகள்,தொழில் நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கபாடுகிறது.      


நயன்தாராவின் புது படத்தில் இணையும் 8 தோட்டாக்கள் பிரபலம்


செய்தியாளர் பற்றி

விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்களிலும் அதிகளவு ஆர்வம் உடையவர். தற்பொழுது மக்களிடையே நிலவி வரும் சமூக வலைதளம், சினிமா தொடர் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். அரசியல் சார்ந்த செய்திகளை அடியோடு வெறுப்பவர். சில நேரங்களில் ஓவியம் வரைதல், சிறந்த நாவல்களை படித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். கடவுள் நம்பிக்கை உடையவர். நாளுக்கு நாள் வெளிவரும் புது புது சினிமா (திரைப்படம் ) சார்ந்த செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்பவர். ... மேலும் படிக்க

ratiga

ராதிகாஎழுத்தாளர்