'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்தில் நாயகி மெஹ்ரின் சம்பந்தப்பட்ட காட்சிகள் நீக்கம்

       பதிவு : Nov 14, 2017 11:24 IST    
'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்தில் நாயகி மெஹ்ரின் சம்பந்தப்பட்ட காட்சிகள் நீக்கம்

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சென்ற 10-ஆம் தேதி வெளிவந்து தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக 'நெஞ்சில் துணிவிருந்தால்' படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் நடிகர் சுந்தீப் கிஷன், விக்ராந்த், மெஹ்ரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தை அன்னை பிலிம் பேக்டரிஸ் சார்பில் ஆண்டனி இந்த படத்தை தயாரித்துள்ளார். 

இந்நிலையில் சமூக ஆர்வலர்கள், விமர்சகர்கள் மற்றும் மக்களின் கருத்துக்கேற்ப இந்த படத்தில் இடம்பெறும் நாயகி மெஹரீன் சம்பந்தப்பட்ட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது. இது குறித்து இயக்குனர் சுசீந்திரன் பேசியதாவது " இந்த படத்தில் இடம்பெறும் 20 நிமிட நாயகி மெஹரின் சம்பந்தப்பட்ட காட்சிகள் நீக்கியுள்ளோம். இந்த காட்சிகள் 15 நாட்களாக படமாக்கினோம். தற்போது  படத்தில் இடம்பெறும் இடைவேளை மற்றும் கிளைமேக்ஸ் காட்சிகளில் மாற்றம் செய்துள்ளோம். இந்த படத்தின் மற்றொரு வர்சன் நேற்று 12 மணி முதல் திரையிடப்பட்டுள்ளது. நாயகி மெஹரின் காட்சிகள் சூழ்நிலை காரணமாக நீக்கப்பட்டுள்ளது. இதற்காக நான் அவரிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.  

 


'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்தில் நாயகி மெஹ்ரின் சம்பந்தப்பட்ட காட்சிகள் நீக்கம்


செய்தியாளர் பற்றி

விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்களிலும் அதிகளவு ஆர்வம் உடையவர். தற்பொழுது மக்களிடையே நிலவி வரும் சமூக வலைதளம், சினிமா தொடர் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். அரசியல் சார்ந்த செய்திகளை அடியோடு வெறுப்பவர். சில நேரங்களில் ஓவியம் வரைதல், சிறந்த நாவல்களை படித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். கடவுள் நம்பிக்கை உடையவர். நாளுக்கு நாள் வெளிவரும் புது புது சினிமா (திரைப்படம் ) சார்ந்த செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்பவர். ... மேலும் படிக்க

ratiga

ராதிகாஎழுத்தாளர்