காவல் துறை அதிகாரியாக நிவேதா பெத்துராஜ்

       பதிவு : Feb 07, 2018 11:28 IST    
nivetha penthuraj joins vijay antony film nivetha penthuraj joins vijay antony film

'பிச்சைக்காரன்' படத்தின் மூலம் பிரபலமான இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி பல வெற்றி படங்களை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார். தற்பொழுது அவரது நடிப்பில் வெளிவரவுள்ள படம் காளி. மேலும் இவரது நடிப்பில் உருவாகி வரும் படங்களில் அனைத்தும் புது புது கெட்டப்பை கையாண்டு வருவதோடு புதுவித அனுப்புவதையும் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் விஜய் ஆண்டனியின் புதுபட தகவல் வந்துள்ளது. இந்த படத்தினை தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் பிரமாண்ட இயக்குனரான ராஜமௌலியின் முன்னாள் உதவியாளராக பணிபுரிந்த  கணேஷா இயக்கவிருப்பதாகவும் இப்படத்திற்கு ‘திமிரு புடிச்சவன்’ என்ற டைட்டிலை வைத்திருப்பதாகவும் தகவல் முன்னதாகவே வெளிவந்திருந்தது. 

இந்நிலையில் இப்படத்தின் நாயகியாக தற்பொழுது தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளின் ஒருவரான நிவேதா பெத்துராஜ் இணைத்திருப்பதாக தகவல் வந்துள்ளது. இவர் 'ஒரு நாள் கூத்து' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் இவரது நடிப்பில் வெளிவந்த 'பொதுவாக என் மனசு தங்கம்',தெலுங்கில் 'மெண்டல் மேதிலோ' போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. இந்த வெற்றி படத்தினை தொடர்ந்து விண்வெளி சார்ந்த 'டிக் டிக் டிக்' படத்திலும் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவர உள்ள 'பார்ட்டி'  படத்திலும் நாயகியாக நடித்துள்ளார்.

 

முதல் முறையாக விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ்  நடிக்கவிருக்கும்  இப்படத்தில் காவல் துறை அதிகாரி வேடத்தை கையாள இருப்பதாக தகவல் வந்துள்ளது. மேலும் காவல் துறை அதிகாரி வேடத்தில் நிவேதா நடிக்கவிருப்பதால் தற்போது புல்லட் வண்டியை ஓட்ட பயிற்சி எடுத்துவருவதாகவும் தகவலில் வெளிவந்துள்ளது. 


காவல் துறை அதிகாரியாக நிவேதா பெத்துராஜ்


செய்தியாளர் பற்றி

விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்களிலும் அதிகளவு ஆர்வம் உடையவர். தற்பொழுது மக்களிடையே நிலவி வரும் சமூக வலைதளம், சினிமா தொடர் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். அரசியல் சார்ந்த செய்திகளை அடியோடு வெறுப்பவர். சில நேரங்களில் ஓவியம் வரைதல், சிறந்த நாவல்களை படித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். கடவுள் நம்பிக்கை உடையவர். நாளுக்கு நாள் வெளிவரும் புது புது சினிமா (திரைப்படம் ) சார்ந்த செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்பவர். ... மேலும் படிக்க

ratiga

ராதிகாஎழுத்தாளர்