ads

காளி படத்தின் முக்கிய தகவலை வெளியிட்ட விஜய் ஆண்டனி

vijay antony kaali shoot wrap up

vijay antony kaali shoot wrap up

வணக்கம் சென்னை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நடிகர் மற்றும் இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் படம் 'காளி'. இப்படத்தினை தெலுங்கில் 'காசி' என்ற பெயரில் வெளியிட உள்ளனர். விஜய் ஆண்டனிக்கு சொந்தமான 'விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்' சார்பில் அவரது மனைவி பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், படத்தின் அனைத்து வித ஷூட்டிங்கும் நேற்று (ஜனவரி 30-ஆம் தேதி) முடிவடைந்து இருப்பதாக விஜய் ஆண்டனி அவரது டிவிட்டரில் பதிவு செய்து வெளியிட்டுள்ளார். 

அஞ்சலி, சுனைனா, அம்ரிதா, சில்பா மஞ்சுநாத் ஆகிய நான்கு நாயகிகள் இணைந்துள்ள இப்படத்தில் விஜய் ஆண்டனி இது வரை பார்த்திராத மாறுபட்ட தோற்றத்தை கையாண்டிருப்பதாக படக்குழு தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் கடந்த நாட்களில் வெளிவந்த படத்தின் போஸ்டர் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்ட 'அரும்பே' என தொடங்கும் பர்ஸ்ட் சிங்கிள் பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருவதோடு படத்தின் எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியுள்ளது. வருகிற மார்ச் மாதம் 30ம் தேதி வெளிவர உள்ள இப்படத்திற்கு மக்களிடையே வரவேற்புகள் அதிகரித்து வருகிறது.      

காளி படத்தின் முக்கிய தகவலை வெளியிட்ட விஜய் ஆண்டனி