Policies

About Us விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் Disclaimer Policy Privacy Policy

Contact

Contact Us Twitter Facebook Google +
Copyright Stage3 News
2018. All Rights Reserved

விஜய் ஆண்டனியின் காளி ரிலீஸ் தேதி அறிவிப்பு

இயக்குனர் க்ரித்திகா உதயநிதி இயக்கத்தில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகிவரும் படம் காளி. இந்த படம் தெலுங்கில் 'காசி' என்ற தலைப்பில் வெளிவர உள்ளது. மேலும் இப்படத்தினை விஜய் ஆண்டனி 'ஃபிலிம் கார்ப்பரேஷன்' தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் அவரே தயாரிப்பதோடு இசையமைக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் இசையில் வெளியான 'அண்டமா' சிங்கிள் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. மேலும் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் வெளிவந்த விஜய் ஆண்டனியின் முகமூடி டீசருக்கும் ரசிகர்களிடம் வெகுவான வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த படத்தில் ஆண்டனி காட்டு பகுதியில் வசித்து வருவது போன்றும், காட்டு வழியாக  வரவிருக்கும் கிராம மக்களிடம் இருந்து வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வரும் கதாபாத்திரத்தை கையாண்டு இருப்பதாகவும் தெரிகிறது.   

மேலும் இப்படத்தில் சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அஞ்சலி, ‘படைவீரன்’ புகழ் அம்ரிதா என நான்கு நாயகிகள் இணைத்துள்ளனர். கடந்த நாட்களில் வெளியிடப்பட்ட போஸ்டர் மற்றும் நேற்று வெளியான சிங்கிள் பாடல் போன்றவற்றில் ஷில்பா மஞ்சுநாத் அதிகளவு இடம் பெற்று ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். இது வரை வெளியாகாத  சுனைனா, ‘படைவீரன்’ புகழ் அம்ரிதா  கேரக்டர் படத்தின் மிக முக்கிய கதாபாத்திரமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஆண்டனியுடன் இணைந்து வெளியான அஞ்சலின் டீசருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.  

இந்த படத்தில் வெளியான போஸ்டரில் அஞ்சலியுடன் இணைத்தும் பாடலில் ஷில்பா-விடம்  இணைந்தும் ஆண்டனி வளம் வந்ததால் இறுதியில் ஆண்டனி யாருடன் இணைவார்  என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது. மேலும் மற்ற இரு நாயகிகள் எந்த கதாபாத்திரத்தில் வளம் வருவார்கள் எனவும் ரசிகர்களின் ஆவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் படத்தின் அதிகார பூர்வ அறிவிப்பாக வருகிற மார்ச் மாதம் 30ம் தேதி படத்தினை வெளியிடுவதாக படக்குழு தகவலை வெளியிட்டுள்ளது.            


விஜய் ஆண்டனியின் காளி ரிலீஸ் தேதி அறிவிப்பு

செய்தியாளர் பற்றி
எழுத்தாளர்
விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்களிலும் அதிகளவு ஆர்வம் உடையவர். தற்பொழுது மக்களிடையே நிலவி வரும் சமூக வலைதளம், சினிமா தொடர் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். அரசியல் சார்ந்த செய்திகளை அடியோடு வெறுப்பவர். சில நேரங்களில் ஓவியம் வரைதல், சிறந்த நாவல்களை படித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். கடவுள் நம்பிக்கை உடையவர். நாளுக்கு நாள் வெளிவரும் புது புது சினிமா (திரைப்படம் ) சார்ந்த செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்பவர்.
1B, Commercial Site, TNHB,
HUDCO Colony, Peelamedu,
Coimbatore, Tamil Nadu
India - 641004.
9790403333 support@stage3.in