Policies

About Us விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் Disclaimer Policy Privacy Policy

Contact

Contact Us Twitter Facebook Google +
Copyright Stage3 News
2018. All Rights Reserved

விஜய் ஆண்டனி காளி படத்தின் அண்டமா சிங்கிள் வெளியீடு

கடந்த 2013ம் ஆண்டில் வெளிவந்த 'வணக்கம் சென்னை' படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனராக க்ரித்திகா உதயநிதி அறிமுகமானார். அதன் பின்னர் பல குறும்படங்கள், ஆவணப்படங்களை இயக்கிய இவர் திருநங்கை பாதுகாப்பு அமைப்பிற்காக 'ஸ்டேண்ட் பை மீ' என்கிற இசை ஆல்பத்தையும் இயக்கியுள்ளார். தற்பொழுது இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியை நாயகனாக வைத்து 'காளி' என்ற படத்தினை இயக்கிவருகிறார். இவர் 'நான்' படத்தின் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் சலீம், சைத்தான், எமன் போன்ற படங்களை தொடர்ந்து பிச்சைக்காரன் படத்தின் மூலம் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். 

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாக்கி வரும் 'காளி' படத்தினை அவருக்கு சொந்தமான ‘விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் அவரே தயாரிப்பதோடு இசையமைக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார். மேலும் இப்படத்தில் சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அஞ்சலி, ‘படைவீரன்’ புகழ் அம்ரிதா என நான்கு நாயகிகள் இணைத்துள்ளனர். இவர்களுடன் இணைந்து ஆர்.கே.சுரேஷ், யோகி பாபு, ஜெயப்பிரகாஷ் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். கடந்த நாட்களில் வெளிவந்த படத்தின் பர்ஸ்ட் லுக்  போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து தெலுங்கிலும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் ஆண்டனி அவரது ட்விட்டர் மூலம் வெளியிட்டுள்ளார். மேலும் 'Andama' என்ற சிங்கிள் ட்ராக் பாடலை நாளை (25.1.18) வெளியிடுவதாகவும் பதிவு செய்துள்ளார். தெலுங்கில் 'காசி' என பெயரில் வெளியிடபடுவது குறிப்பிட தக்கது.     

விஜய் ஆண்டனி காளி படத்தின் அண்டமா சிங்கிள் வெளியீடு

செய்தியாளர் பற்றி
எழுத்தாளர்
விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்களிலும் அதிகளவு ஆர்வம் உடையவர். தற்பொழுது மக்களிடையே நிலவி வரும் சமூக வலைதளம், சினிமா தொடர் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். அரசியல் சார்ந்த செய்திகளை அடியோடு வெறுப்பவர். சில நேரங்களில் ஓவியம் வரைதல், சிறந்த நாவல்களை படித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். கடவுள் நம்பிக்கை உடையவர். நாளுக்கு நாள் வெளிவரும் புது புது சினிமா (திரைப்படம் ) சார்ந்த செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்பவர்.
1B, Commercial Site, TNHB,
HUDCO Colony, Peelamedu,
Coimbatore, Tamil Nadu
India - 641004.
9790403333 support@stage3.in