ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தின் ஏ எழும்பா எண்ணி எண்ணி வீடியோ பாடல்

       பதிவு : Feb 06, 2018 14:36 IST    
yae elumba enni enni video song yae elumba enni enni video song

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் கவுதம் கார்த்திக் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் படம் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்'. இந்த படத்தை அறிமுக இயக்குனரான ஆறுமுககுமார் இயக்கியுள்ளார். நேற்று இந்த படத்தில் இடம்பெறும் 'ஹேய் ரீங்காரா' வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டது. இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தில் இடம்பெறும் 'ஏ எழும்பா எண்ணி எண்ணி' என்ற வீடியோ பாடலை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது. இயக்குனர் ஆறுமுக குமார் தனது முதல் படத்திற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு ஜனவரியில் வெளியிட்டார்.

பின்னர் இந்த படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு இதே நாளில் 2017 பிப்ரவரி 6-ஆம் தேதி துவங்கப்பட்டது. இந்த படத்தில் விஜய் சேதுபதி பழங்குடி மக்களின் தலைவராக 'எமன்' கதாபத்திரத்திலும், கவுதம் கார்த்திக் மாணவர் காதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இந்த படத்தின் மூலம் தெலுங்கு நடிகையான நிகாரிகா தமிழ் திரையுலகில் அறிமுகமானார். கடந்த ஆண்டு நடந்த படப்பிடிப்பின் பாதியில் நடிகை காயத்ரி பழங்குடி பெண் கதாத்திரத்தில் இணைந்துள்ளார். ஆந்திராவில் உள்ள மலைக்கிராமத்தில் இந்த படத்தின் கதை அமைந்துள்ளது. தற்போது இந்த படத்தில் இடம் பெற்றுள்ள 4 பாடல்களில் 'ஹேய் ரீங்காரா', 'ஏ எழும்பா எண்ணி எண்ணி' போன்ற பாடல்களை படக்குழு வெளியிட்டுள்ளது. அடுத்ததாக 'ராக்கோழி கூட்டாளிங்க' மற்றும் 'லம்பா லம்பா' போன்ற பாடல்களை விரைவில் படக்குழு வெளியிட உள்ளது.

 


ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தின் ஏ எழும்பா எண்ணி எண்ணி வீடியோ பாடல்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்