ads

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் சர்ச்சையினால் ரசிகர்கள் மகிழ்ச்சி

ONNPS movie still

ONNPS movie still

குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் வட்டாரத்தை அதிகப்படுத்தி வலுவாக்கிய மக்கள் நாயகன் விஜய் சேதுபதி தற்பொழுது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் கவுதம் கார்த்திக் உடன் இணைந்து நடித்து வரும் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.  

இந்த டீசரில் ''சீதையை கடத்தி கூட்டிட்டு வந்து கைப்படமா பத்திரமா வைச்சிருந்த ராவணனை அரக்கன் என்று சொல்றோம், அதே ராமன் சீதையை கூட்டிட்டு வந்து சந்தேக தீயிலே எரிசிட்டான்....அவர கடவுள் என்று சொல்றோம்'' என்று சேதுபதியின் வசனம் இடம் பெற்றிருந்தது. தற்பொழுது இந்த வசனம் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. மெர்சல் படத்திற்கு சர்ச்சையை ஏற்படுத்திய பா.ஜா.கா வின் பார்வை சேதுபதி பக்கம் திரும்பி உள்ளது.     

இது வரை எந்த வித சர்ச்சைகளிலும் சிக்காத சேதுபதி முதல் முதலாக 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தில் வெளிவந்த டீசரின் மூலம் சிக்கியுள்ளார். மெர்சல் படத்திற்கு கிடைத்த வெற்றி சேதுபதிக்கு கிடைக்கும் என்று ரசிகர்கள் மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர்.  

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் சர்ச்சையினால் ரசிகர்கள் மகிழ்ச்சி