ads

காஞ்சனா 3 படத்தில் இருந்து ஓவியா விலகல்

oviya left in kanchana 3 movie

oviya left in kanchana 3 movie

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் வட்டாரத்தினை அதிகப்படுத்திய ஓவியா தற்பொழுது படங்களில் நடிப்பது, நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வது, விளம்பரங்களில் நடிப்பது என்று பிசியாக இருக்கிறார். இந்நிலையில் முன்னணி நடிகர்களுடனும் நடிப்பதற்கு கைகோர்த்துள்ளார். இதன் காரணத்தினால் ஓவியா ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சக்கட்டத்தில் இருந்தனர்.       

இந்நிலையில் முன்னணி நடிகர், நடன மற்றும் திரைப்பட இயக்குனரான ராகவா லாரன்ஸ் முனி படத்தின் மூலம் மாபெரும் வெற்றியை பெற்றார். இதனை தொடர்ந்து காஞ்சனா 1, காஞ்சனா 2 படத்தில் மூலம் ரசிகர்கள், விமர்சனங்களின் வரவேற்பு, பிரபலங்களின் பாராட்டு என ஒரு பெரிய மதிப்பையே ஏற்படுத்தி தந்தது. இந்நிலையில் காஞ்சனா 3 படத்தினை எடுப்பதற்கு தயாரான லாரன்ஸ், நாயகியாக ஓவியாவை தேர்வு செய்தார்.  

 இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு தொடங்க தாமதம் ஆனதினால் படத்தில் இருந்து ஓவியா விலகியதாக தகவல்கள் வந்துள்ளது. இது குறித்து படக்குழு தயாரிப்பு சங்கத்திடம் புகார் அளித்துள்ளனர். காஞ்சனா 3 படத்தின் படப்பிடிப்பு தாமதமாவதினால் இதில் இருந்து விலகியதாக ஓவியா கூறியுள்ளார்.  

காஞ்சனா 3 படத்தில் இருந்து ஓவியா விலகல்