ads

பிக் பாஸ் சினேகனுக்கு நன்கொடை வழங்கிய ராகவா லாரன்ஸ்

lawrence helps bigboss snehan

lawrence helps bigboss snehan

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்களின் ஒருவரான சினேகன் தற்பொழுது அவரின் சொந்த ஊரில் நூலகம் கட்ட துவங்கியுள்ளார். இந்த நிகழ்ச்சி நடைபெறும் போது பல நல்ல விஷயங்களை பகிர்ந்து கொண்ட சினேகன், நான் இந்த நிகழ்ச்சியில் வெற்றி அடைந்தாள் என் சொந்த ஊரில் அப்பா, அம்மா பெயரில் நூலகம் ஒன்று அமைப்பேன் என்று கூறியிருந்தார். ரசிகர்களும் சினேகன் தான் வெற்றி அடைவர் என்று நினைத்திருந்தார்கள். இறுதியில் அதற்கு எதிர் மறையாக ஆரவ் வெற்றியாளராக அறிவித்தனர்.

இந்த காரணத்தினால் நூலகம் கட்டுவதற்கான  கனவு கலைந்து விட்டது. இதன் பின்னர் பல சமூக நலன்களை மேற்கொண்டு வரும் நடிகர் ராகவா லாரன்ஸ் நூலகம் கட்டுவதற்காக 10 லட்சம் நன்கொடை வழங்கியிருக்கிறார். இந்த அறிவிப்பினை சினேகன் நிகழ்ச்சியின் போது பகிர்ந்து கொண்டார். மேலும் நன்கொடை வழங்கியதை வெளிப்படுத்த வேண்டாம் என்றும் லாரன்ஸ் கூறியிருக்கிறாராம். இந்த நுலகத்திற்காக 25 அறிஞர்களை கொண்டு நூல்களை தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுப்பட்டு வருவதாக சினேகன் கூறியுள்ளார்.   

    

பிக் பாஸ் சினேகனுக்கு நன்கொடை வழங்கிய ராகவா லாரன்ஸ்