ads
மேயாத மான் படத்தின் அடுத்த நாயகி உருவாகியுள்ளார்
மீனா ஸ்ரீ (Author) Published Date : Nov 11, 2017 14:40 ISTபொழுதுபோக்கு
ரத்னா குமார் இயக்கத்தில் குறைந்த பட்ஜத்தில் எடுக்கப்பட்ட மேயாத மான் படத்திற்கு அதிகளவு வரவேற்பு கிடைத்திருந்தது. இந்நிலையில் 2.0 இசை வெளியீட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறைந்த பட்ஜத்தில் எடுக்கும் படத்திற்கு தவறான விமசனங்கள் தருவதை தவிர்க்கவும் என்று சொன்னதும் இந்த படத்தின் அடிப்படையில் தான் என்று கூறப்படுகின்றனர். அந்த அளவிற்கு பாடல் மற்றும் கதை அம்சம் வெற்றி பெரும் அளவிற்கு நன்றாக அமைந்திருந்தது.
இந்த படத்தின் மூலம் சின்னத்திரை பிரியா பவானி சங்கர் சூப்பர் ஹிட் வெற்றியை பெற்று தற்பொழுது முன்னணி நடிகர்களின் சில படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் மேயாத மான் படத்தில் வைபவ் தங்கையாக நடித்த இந்துஜா பேசப்படும் அளவிற்கு ஒரு குத்து பாட்டில் நடனமாடி கலக்கி இருந்தது அனைவரையும் கவரும் வகையில் அமைந்திருந்தது.
இதன் காரணத்தினால் இந்துஜாவிற்கு படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் வந்துகொண்டிருந்தது. இந்நிலையில் தயாரிப்பாளர் ஆர்கே. சுரேஷ் ஹீரோவாக களமிறங்கிய பில்ல பாண்டி படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். மேயாத மான் படத்தில் சென்னை பெண்ணாக அறிமுகமாகி கலக்கிய இந்துஜா பில்லா பாண்டி படத்தில் மதுரை பெண்ணாக களமிறங்கியுள்ளார் .