ads
தனுஷின் மாரி 2 படத்தின் மூலம் மீண்டும் நடன இயக்குனரான பிரபு தேவா
வேலுசாமி (Author) Published Date : Aug 01, 2018 16:10 ISTபொழுதுபோக்கு
வேலையில்லா பட்டதாரி 2 படத்திற்கு பிறகு தனுஷ் நடிப்பில் மாரி 2, வட சென்னை, எனை நோக்கி பாயும் தோட்டா போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இதில் இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் கடந்த 2015இல் வெளியாகி இளைஞர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்ற மாரி படத்தின் இரண்டாம் பாகம் தற்போது மும்முரமாக தயாராகி வருகிறது. முதல் பாகத்தில் காஜல் அகர்வால் தனுசுக்கு ஜோடியாக நடித்திருந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் சாய் பல்லவி நாயகியாக நடித்து வருகிறார்.
இவர்களுடன் இணைந்து கிருஷ்ணா, டோவினோ தாமஸ், வித்யா பிரதீப், வரலக்ஷ்மி ரோபோ சங்கர் மற்றும் கலக்க போவது யாரு நிஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் பாடல் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன. தற்போது இந்த படத்தின் ஒரு பாடலுக்கு நடன ஆசிரியராக நடிகர் மற்றும் இயக்குனரான பிரபு தேவா பணிபுரிந்துள்ளார்.
இது குறித்த அறிவிப்பை தனுஷ் தற்போது வெளியிட்டுள்ளார். பிரபு தேவா நடனம் என்றாலே ரசிகர்களுக்கு ஏற்றவாறு நல்ல குத்து டான்ஸாக இருக்கும். அப்போ நிச்சயம் இந்த படத்தில் ஒரு குத்து பாடல் உண்டு என ரசிகர்கள் உற்சாகத்துடன் உள்ளனர். இந்த படத்தில் நாயகனாக மட்டுமல்லாமல் ஒரு தயாரிப்பாளராகவும் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தனுஷ் இந்த படத்தை தயாரித்து வருகிறார். இந்த படம் குழந்தைகள் தினத்தில் டிசம்பர் 28ஆம் தேதி வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.
I’m super privileged to share with you all, that the man who is the reason behind dance evolving in our country @PDdancing is choreographing a song for us in #maari2 .. grew up watching his magic. What a moment for me. Thank you sir. ðŸ™ðŸ™ðŸ™ pic.twitter.com/FU1fIxhrLV
— Dhanush (@dhanushkraja) August 1, 2018