பிரபு தேவாவின் மெர்குரி படத்தின் வெளியீடு தேதி அறிவிப்பு

       பதிவு : Feb 15, 2018 18:30 IST    
prabhu deva new movie mercury release date announced prabhu deva new movie mercury release date announced

நடிகர் பிரபு தேவா நடிப்பில் இறுதியாக கடந்த பொங்கலன்று 'குலேபகாவலி' படம் வெளியானது. இதனை தொடர்ந்து நடிகர் பிரபு தேவா, யங் மங் சங், சார்லி சாப்ளின் 2, மெர்குரி, லட்சுமி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் 'மெர்குரி' படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வருகிறார்.

'இறைவி' படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு கார்த்திக் சுப்பராஜ் 'மெர்குரி' படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை ஸ்டோன் பென்ச் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் தயாரித்து வருகிறார். இந்த படத்தில் பிரபு தேவா, சனத் ரெட்டி, தீபக் பரமேஷ், ரம்யா நம்பீசன், அனீஸ் பத்மன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

 

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கு திரு ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். விவேக் ஹர்சன் இந்த படத்திற்கு எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார். 

இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் முதல் முறையாக த்ரில்லர் கதையாக உருவாக்கி வரும் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. நடிகர் பிரபு தேவாவிற்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் களமிறங்கியுள்ள இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி வெளியாவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

 

mercury movie released on april 13th, image credit - mercury teammercury movie released on april 13th, image credit - mercury team

பிரபு தேவாவின் மெர்குரி படத்தின் வெளியீடு தேதி அறிவிப்பு


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்