வில்லனாக உருவெடுத்த பிரசன்னா

       பதிவு : Dec 03, 2017 09:12 IST    
prasanna villain role gets lauded prasanna villain role gets lauded

மிஸ்கின் இயக்கத்தில் சில மாதகங்களுக்கு முன்பு வெளிவந்த துப்பறிவாளன் படத்தில் நாயகன் விஷாலுக்கு நண்பனாக நடித்த பிரசன்னாவின் கேரக்டர் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் இருந்தது. இதனை தொடர்ந்து சுசி கணேசன் இயக்கத்தில் பாபி சிம்ஹா நடிப்பில் வெளிவந்த 'திருட்டு பயலே 2' படத்தில் பிரசன்னா வில்லன் வேடத்தில் நடித்து ரசிகர்களை அலறவைக்கும் விதமாக அதிரடி திரில்லரில் கலக்கி இருந்தார். 

பிவிஎஸ். ரவி இயக்கத்தில் தெலுங்கில் வெளிவந்த 'ஜவான்' படத்தில் பிரசன்னா வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். திருட்டு பயலே 2 படத்தின் வெளியீட்டு தேதியில் ஜவான் படம் தெலுங்கில் வெளிவந்தது. இந்த இரு படங்களும் ஒரே தேதியில் வெளிவந்து தமிழ் மற்றும் தெலுங்கில் பிரசன்னாவின் வில்லன் கேரக்டர் ரசிக்கும் விதத்தில் அமைத்துள்ளது. இதன் மூலம் பிரசன்னாவின் வரவேற்பு தமிழ், தெலுங்கு என இரு திரையுலகிலும் அதிகரித்துள்ளது.       

 

வில்லன் கேரக்டரில் கிடைத்த இந்த வெற்றியை தக்கவைத்து கொள்ளும் விதமாக இனி வரும் படத்தில் பிரசன்னா வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பாரா என எதிர்பார்க்கப்படுகிறது. 


 

 


வில்லனாக உருவெடுத்த பிரசன்னா


செய்தியாளர் பற்றி

விக்னேஷ் சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த செய்திகளை பெருமளவு எழுதி வருகிறார். இவர் தனது செய்திகளில் கற்பனை திறனையும், புது புது தகவல்களையும் வெளிப்படுத்தி வருகிறார். இவர் செய்திகளை எழுதுவதில் வல்லவர். தனது திறமையால் சிறு தகவல்களை வைத்து அதன் மூலம் நம்மால் ஈன்ற அளவுக்கு தனது முயற்சிகளை வெளிப்படுத்துவார். அனைவரிடத்திலும் வெளிப்படையாக பழக கூடியவர். மற்றவர்களிடமிருந்து புது நுணுக்கங்களையும் நுட்பத்தையும் சேகரித்து தன்னுடைய அறிவை வளர்த்து கொள்வார். இவர் தான் சேகரிக்கும் தகவல்களை மிகவும் எளிமையான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் சிறப்பானதாக விளங்குகிறார். ... மேலும் படிக்க

Vignesh writer and reporter

விக்னேஷ்செய்தியாளர்