ads

திருட்டு பயலே 2 - ட்ரைலர்

thiruttu payale 2 trailer

thiruttu payale 2 trailer

கருப்பன் படத்தில் நடித்த பாபி சிம்ஹா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றத்தினை தொடர்ந்து சுசி கணேஷ் இயக்கத்தில் 'திருட்டு பயலே 2' படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக அமலாபால் நடித்துள்ள இப்படத்தில் பிரசன்னா, சனம் செட்டி, விவேக், ரோபோ சங்கர் , தமீன் அன்சாரி, விஜே. அட்மஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.   

கல்பாத்தி எஸ். கணேஷ் தயாரிக்கும் இப்படத்தில் பாபி சிம்ஹா காவல் துறை அதிகாரியாக நடிக்கிறார். காதல் கலந்த அதிரடி த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர், டீசர், இசை போன்றவை வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. மேலும் இந்த படத்தில் பாபி சிம்ஹா, அமலாபால் இருவருக்கும் காதல் காட்சிகள் அதிகளவு இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் முன்பே வெளிவந்திருந்தது.

AGS என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் வித்யாசாகர் இசை, ராஜா முகம்மது எடிட்டிங் பணியில் இணைந்துள்ளனர். வருகிற 30ம் தேதி வெளிவர இருக்கும் படத்தின் ட்ரைலரை இன்று மாலை 5 மணிக்கு வெளியிட உள்ளனர்.                 

திருட்டு பயலே 2 - ட்ரைலர்