காஞ்சனா 3 படத்தை தொடர்ந்து ராகவா லாரன்ஸின் காலபைரவா

       பதிவு : Jan 18, 2018 17:01 IST    
raghava lawrence new movie titled as kaalabairavaa raghava lawrence new movie titled as kaalabairavaa

நடன கலைஞரான ராகவா லாரன்ஸ் நடிப்பில் 'மொட்ட சிவா கெட்ட சிவா', 'சிவலிங்கா' போன்ற படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் 'காஞ்சனா 3' படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக வெளிவந்த முனி 1, 2, 3 படங்களை தொடர்ந்து தற்போது 'காஞ்சனா 3' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் படத்தினை லாரன்ஸ் இயக்கி, நாயகனாக நடித்து வருகிறார். மேலும் ‘சன் பிக்சர்ஸ்’ தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து ராகவா லாரன்ஸ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ராகவேந்திரா புரொடக்ஷன்’ மூலம் தயாரித்தும் வருகிறார்.  

சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த தகவலில் பிக் பாஸ் ஓவியா படத்தில் இருந்து விலகி விட்டதாக தகவல் வந்தது. இந்த தகவலை முறியடிக்கும் விதமாக லாரன்ஸ், ஓவியா இருவரும் படப்பிடிப்பின் போது எடுத்து கொண்ட புகைப்படத்தை சமீபத்தில் வெளியீட்டு அது வெறும் வதந்தியே என்று நிரூபித்தனர். சமீபத்தில் நடைபெற்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து தற்பொழுது 50% வரை நிறைவு பெற்றதாக தகவல் வந்துள்ளது. இன்னும் சில நாட்களில் படத்தின் போஸ்டர், டீசர் வெளியீட்டு தேதியை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்க படுகிறது.

 

இதனை தொடர்ந்து நடிகர் ராகவா லாரன்சின் அடுத்த படம் குறித்த தகவல் வந்துள்ளது. லாரன்ஸின் அடுத்த படத்தை அவருடைய ராகவேந்திரா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்தில் அவரே கதாநாயகனாக நடிக்க உள்ளார். இந்த படம் பிரமாண்ட முறையில் மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட உள்ளது. இந்த படத்திற்கு 'கால பைரவா' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் ஹாலிவுட் படமான 'கோஸ்ட் ரைடர்' படத்தை தழுவியதாக இருக்கும் என்று தகவல் வெளியாகிறது.

raghava lawrence new movie titled as kaalabairavaaraghava lawrence new movie titled as kaalabairavaa

காஞ்சனா 3 படத்தை தொடர்ந்து ராகவா லாரன்ஸின் காலபைரவா


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்