ads
காலா படத்தை பற்றி பேசிய ரஜினிகாந்த்
வேலுசாமி (Author) Published Date : Dec 30, 2017 14:28 ISTபொழுதுபோக்கு
நடிகர் ரஜினிகாந்த் ஐந்தாவது நாளாக ரசிகர்களை சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் சந்தித்து வருகிறார். இந்த சந்திப்பில் ரசிகர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி புகைப்படங்களை எடுத்து வருகிறார். இந்த ரசிகர்கள் சந்திப்பு நாளை வரை நடைபெற உள்ளது. சூப்பர் ஸ்டார் நடிப்பில் அடுத்ததாக சங்கரின் '2.0' மற்றும் இயக்குனர் பா ரஞ்சித்தின் 'காலா' போன்ற படங்கள் திரைக்கு வரவுள்ளது. இந்த ரசிகர்கள் சந்திப்பில் ரஜினிகாந்த் '2.0' படத்தின் வெளியீடு தேதியை தெரிவித்துள்ளார். இதனை அடுத்து 'கபாலி' படத்திற்கு பிறகு இயக்குனர் பா ரஞ்சித் இயக்கும் 'காலா' படத்தை பற்றி ரஜினிகாந்த் பேசியுள்ளார். ரசிகர்கள் சந்திப்பில் பேசிய ரஜினிகாந்த் "உடல்நல குறைவால் சிங்கப்பூரில் நான் சிகிச்சை பெறும்போது ரசிகர்களின் பிரார்த்தனை தான் எனது உயிரை மீட்டு கொண்டு வந்தது.
எனது ரசிகர்களின் அன்பிற்கும் பிரார்த்தனைக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ரசிகர் ஒருவர் சினிமா அரசியல் எல்லாம் வேண்டாம் நீங்கள் உயிரோடு மீண்டு வந்தால் போதும் என்று எனக்கு கடிதம் அனுப்பியிருந்தார். நீங்கள் என்மீது வைத்திருக்கும் அன்புக்கு நன்றி. மேலும் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள '2.0' படம் ஏப்ரல் 14-இல் வெளிவரவுள்ளது. இதனை அடுத்து இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் தற்போது நடித்து வருகிற படம் 'காலா'. இந்த படத்தில் இயக்குனர் பா ரஞ்சித், ரஜினிகாந்தை மாறுபட்ட கோணத்தில் காண்பித்துள்ளார். இந்த படம் நிச்சயம் உங்களுக்கு புதுவித அனுபவத்தை கொடுக்கும்." என்று தெரிவித்துள்ளார்.