ads
காலா படத்திற்கு குரல் கொடுக்க ஆரம்பித்துள்ள ரஜினி
வேலுசாமி (Author) Published Date : Jan 21, 2018 20:34 ISTபொழுதுபோக்கு
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘காலா’. நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் பா ரஞ்சித் கூட்டணி `கபாலி' படத்திற்கு பின்னர் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் `கபாலி' படத்தை தொடர்ந்து ‘காலா’ படத்திலும் வயதான தோற்றத்தில் நடித்து வருகிறார். இந்த படம் சென்னை மற்றும் மும்பை போன்ற பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்துள்ளது. இந்நிலையில் தற்போது ‘காலா’ படத்தின் போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்த படத்தின் டப்பிங் பணிகள் சென்னையில் உள்ள ஸ்டூடியோவில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் இடம் பெற்ற கதாபாத்திரங்கள் அனைவரும் தனது டப்பிங் பணிகளை முடித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் ரஜினி இன்று தனது டப்பிங் பணியை தொடங்கி உள்ளார். நடிகர் ரஜினிகாந்த் டப்பிங் பேசி முடித்த பிறகு அடுத்த கட்டத்தில் 'காலா' படம் நகர உள்ளது.
நடிகர் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில், ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிகை ஈஸ்வரி ராவ் நடிக்கிறார். சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, சாயாஜி ஷிண்டே, பங்கஜ் த்ரிபாதி, மிகி மகிஜா, மேஜர் பிக்ரம்ஜித், அருள்தாஸ், சுதன்ஷூ பாண்டே, அரவிந்த் ஆகாஷ், ரமேஷ் திலக், மணிகண்டன், ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டேல், அருந்ததி போன்ற திரைப்பட வட்டாரங்கள் இந்த படத்தில் இணைந்துள்ளது.. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இந்த படம் விரைவில் திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
rajinikanth starts kaala movie dubbing
rajinikanth starts kaala movie dubbing
rajinikanth starts kaala movie dubbing