கரு படத்திற்கு தியா என்று மாற்றுவதற்கு காரணம் இது தான்

       பதிவு : Apr 22, 2018 13:51 IST    
நடிகை சாய் பல்லவியின் கரு படத்தின் தலைப்பு தியா என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நடிகை சாய் பல்லவியின் கரு படத்தின் தலைப்பு தியா என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நடிகை சாய் பல்லவி நடிப்பில் தமிழில் முதன் முறையாக வெளியாகவுள்ள படம் 'கரு'. இந்த படம் இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ளது. நடிகை சாய் பல்லவியின் முதல் தமிழ் படம் என்றாலும் அவருக்கு தமிழ் ரசிகர்களிடம் 2015ஆம் ஆண்டிலிருந்தே ஏராளமான வரவேற்புகள் இருந்து வருகிறது. அதற்கு காரணம் 2015இல் மலையாளத்தில் வெளியான 'ப்ரேமம்' படத்தில் அவர் நடித்திருந்த மலர் டீச்சர் கதாபாத்திரம். ஒரு தமிழ் பெண் என்றாலும் அவர் மலையாளம் தெலுங்கு படங்களில் அதிகமாக கவனம் கவனம் செலுத்தி வந்தார்.

ஆனால் அவருக்கு தமிழில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாட்களாக இருந்து வந்தது. ஒரு நல்ல கதைக்காக ஆர்வமாக காத்திருந்த அவர் இயக்குனர் விஜயின் கதை பிடித்து போக 'கரு' படத்தில் நடிக்க சம்மதித்தார். இதன் பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது இந்த படத்தின் டீசர் ட்ரைலர் போன்றவையை படக்குழு வெளியிட்டது. பின்னர் இந்த படத்தின் வெளியிட்டிற்காக காத்து கொண்டிருக்கும் நேரத்தில் தயாரிப்பாளர் வேலை நிறுத்தம் ஆரம்பித்தது.

 

ஒன்றரை மாதத்திற்கு மேல் நடந்த வேலை நிறுத்தம் காரணமாக இந்த படம் வெளியாகாமல் இருந்தது. தற்போது தயாரிப்பாளர் வேலை நிறுத்தம் முடிவடைந்த நிலையில் வரும் ஏப்ரல் 27-ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஆனால் தற்போது இந்த படத்தின் தலைப்பை 'தியா' என்று மாற்றி புது போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். இந்த படத்தின் தலைப்பை மாற்றியதற்கு காரணம் KS ஸ்க்ரீன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் 'கரு' என்ற தலைப்பை பதிவு செய்து வைத்திருந்தது.

இதனால் எங்களுடைய தலைப்பை படக்குழு உபயோகிக்க கூடாது என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதன் காரணமாக தற்போது இந்த படத்தின் தலைப்பை 'தியா' என்று மாற்றியுள்ளனர். இந்த படம் வெளியாகவுள்ள ஏப்ரல் 27-இல் விக்ரம் பிரபுவின் 'பக்கா' படமும், அரவிந் சாமியின் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படமும் வெளியாகவுள்ளது.

 


கரு படத்திற்கு தியா என்று மாற்றுவதற்கு காரணம் இது தான்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்