ads

சமுத்திரக்கனியின் ஏமாளி படத்திற்கு ஏ சான்றிதழ்

yemaali movie ensored a certificate

yemaali movie ensored a certificate

வளர்ந்து வரும் இயக்குனர்களின் ஒருவரான சமுத்திரக்கனி பல வெற்றி படங்களை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார். இவரது படங்கள் பெரும்பாலும் சமுதாயத்தை சார்ந்ததாகவே இருக்கும். படத்தினை இயக்குவது மட்டும் இல்லாமல் சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பான நடித்து, நடிப்பிலும் ரசிகர்களிடம் வெகுவான வரவேற்பினை பெற்று வருகிறார். இவர் நடிப்பில் தற்பொழுது உருவாகி வரும் 'ஏமாலி' படத்தில் பல வித்தியாசமான கெட்டப்பை புதுவித தோற்றத்தில்  கையாண்டுள்ளார். இவர் கையாண்டுள்ள சில போஸ்டர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. 

இந்த படத்தின் மூலம் முதல் முறையாக நான்கு மாறுபட்ட தோற்றத்தில் நடித்துள்ள சமுத்திரக்கனியின்   ஒரு கதாபாத்திரம் காவல் துறை அதிகாரி என்று படக்குழு முன்னதாக வெளியிட்டிருந்தது. மற்ற மூன்று கெட்டப் பற்றிய எந்த வித தகவலையும் படக்குழு வெளியிடாமல் சஸ்பென்ஸை மேற்கொண்டு வருகிறது. இந்த படத்தில் மற்ற மூன்று கதாபாத்திரம் என்னவாக இருக்கும் என்று ரசிகர்களிடம் எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது. மேலும் இப்படத்தின் போஸ்டர், டீசர், இசை மற்றும் ட்ரைலர் போன்றவை  கடந்த நாட்களில் படக்குழு வெளியிட்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. தற்போது, வந்த தகவலில் படத்தை பார்த்த சென்சார் குழுவினர் படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் அளிக்கப்பட்டிருப்பது தெரிகிறது. வி.சட்.துரை இயக்கத்தில் லதா ப்ரொடக்சன் தயாரிப்பில் உருவாகி உள்ள இப்படத்தினை வருகிற பிப்ரவரி 2ம் தேதி வெளியிட உள்ளனர்.     

சமுத்திரக்கனியின் ஏமாளி படத்திற்கு ஏ சான்றிதழ்