இறுதி கட்டத்தில் ஜிவி பிரகாஷின் சர்வம் தளமயம்

       பதிவு : Jan 31, 2018 12:51 IST    
gv prakash sarvam thaala mayam shooting updates gv prakash sarvam thaala mayam shooting updates

பிரபல ஒளிப்பதிவாளர் ராஜிவ் மேனன் இயக்கத்தில் இசையை மையமாக கொண்டு உருவாகி வரும் படம் 'சர்வம் தாள மயம்'. இந்த படத்தில் நாயகனாக ஜிவி பிரகாஷ் நடித்து வருகிறார். இதற்கு முன்னதாகவே ராஜிவ் மேனன் இயக்கத்தில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், மின்சார கனவு போன்ற இரு படங்கள் வெளிவந்து நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் சிறந்த ஒளிப்பதிவாளருக்காக 'கடல்' படத்தின் மூலம் பிலிம்பேர் விருதினை பெற்றுள்ளார். தற்பொழுது நீண்ட இடைவெளிக்கு பிறகு ராஜிவ் மேனன் 'சர்வம் தாள மயம்' படத்தின் மூலம் இயக்குனராக உருவெடுத்துள்ளார்.  

நம் நாட்டின் பாரம்பரிய இசைக்கும் தற்பொழுது நாகரிக வளர்ச்சியினால் பரவி வரும் ஹிப் ஹாப் இசைக்கும் இடையேயான மோதல் தான் படத்தின் மைய கதை. மேலும் இப்பட்டத்தில் இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் வளம் வந்துள்ளார். இசையை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் 'இசை புயல்' ஏ ஆர்.ரகுமான் இசையமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். மேலும் இப்படத்தில் 9 பாடல்கள் இடம் பெற்றிருப்பதாகவும் படத்தின் அனைத்து வித பின்னணி  இசையை (BGM) முடித்திருப்பதாக தகவல் முன்னதாகவே வெளிவந்திருந்தது. இந்நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியிருப்பதாக படக்குழு தகவலை வெளியிட்டுள்ளது.

 

மேலும் இறுதி கட்ட படப்பிடிப்பில் ஒரு பாடலுக்கான காட்சிகள் மட்டும் படமாக்க உள்ளதாம். இறுதி கட்ட படப்பிடிப்பை முடிவடைந்ததை தொடர்ந்து மிக விரைவில் படத்தின் டீசர், ட்ரைலர் போன்றவை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது   


இறுதி கட்டத்தில் ஜிவி பிரகாஷின் சர்வம் தளமயம்


செய்தியாளர் பற்றி

விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்களிலும் அதிகளவு ஆர்வம் உடையவர். தற்பொழுது மக்களிடையே நிலவி வரும் சமூக வலைதளம், சினிமா தொடர் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். அரசியல் சார்ந்த செய்திகளை அடியோடு வெறுப்பவர். சில நேரங்களில் ஓவியம் வரைதல், சிறந்த நாவல்களை படித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். கடவுள் நம்பிக்கை உடையவர். நாளுக்கு நாள் வெளிவரும் புது புது சினிமா (திரைப்படம் ) சார்ந்த செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்பவர். ... மேலும் படிக்க

ratiga

ராதிகாஎழுத்தாளர்