ads

ஜீவாவுடன் இணையும் ஷாலினி பாண்டே

jiiva new movie heroine

jiiva new movie heroine

தெலுங்கில் வெளியான 'அர்ஜுன் ரெட்டி' படத்தில் நாயகியாக நடித்து திரையுலகில் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. இந்த முதல் படத்திலே நல்ல வெற்றியை பெற்றிருந்ததினை தொடர்ந்து தமிழ் திரையுலகிலும் வலம்வந்துள்ளார். இவர் தற்பொழுது ஜிவி.பிரகாஷுடன் இணைந்து '100%' காதல்' படத்தில் நாயகியாக நடிக்கிறார். இந்த படம் தெலுங்கின் ரீமேக் என்பது குறிப்பிட்ட தக்கது.

இதனை அடுத்து பல பிரபலங்கள் இணைந்து நடிக்கும் 'மகாநதி' படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ஜீவா நடிக்கவிருக்கும் ஒரு புதிய படத்தில் நாயகியாக நடிக்க ஷாலினி  கமிட்டாகி இருப்பதாக தகவல் வந்துள்ளது. ஜிவியின் 100% காதல் படத்தின் படப்பிடிப்புகள் முடிந்ததும் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறாராம்.     

ஜீவாவுடன் இணையும் ஷாலினி பாண்டே