தன்னுடைய அப்பா படத்தின் ட்ரைலரை வெளியிடும் ஸ்ருதி ஹாசன்

       பதிவு : Jun 09, 2018 12:09 IST    
நீண்ட நாட்களாக தாமதமாகி வந்த விஸ்வரூபம் 2 படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்து கொண்டிருந்த நிலையில் இந்த படத்தின் ட்ரைலரை ஸ்ருதி ஹாசன் ஜூன் 11இல் வெளியிடுவதாக தெரிவித்துள்ளார். நீண்ட நாட்களாக தாமதமாகி வந்த விஸ்வரூபம் 2 படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்து கொண்டிருந்த நிலையில் இந்த படத்தின் ட்ரைலரை ஸ்ருதி ஹாசன் ஜூன் 11இல் வெளியிடுவதாக தெரிவித்துள்ளார்.

உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் தற்போது விஸ்வரூபம் 2, இந்தியன் 2, சபாஷ் நாயுடு போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இதில் நீண்ட காலங்களாக தாமதமாகி வந்த விஸ்வரூபம் 2 படத்தின் பணிகள் ஒருவழியாக இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. கமல்ஹாசன் நடிப்பில் 2013இல் வெளியான 'விஸ்வரூபம்' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள இந்த படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் மற்றும் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.

தற்போது இந்த படத்தின் அடுத்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டிருந்த நிலையில் கமலின் மகளான ஸ்ருதி ஹாசன் இந்த படத்தின் ட்ரைலரை வெளியிடுவதாக தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இதன்படி இந்த படத்தின் ட்ரைலரை வரும் ஜூன் 11ஆம் தேதி மாலை 5 மணிக்கு ஸ்ருதி ஹாசன் வெளியிட உள்ளார். நடிகை ஸ்ருதி ஹாசன் தனது அப்பாவுடன் ஹேய் ராம் படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இணைந்து சபாஷ் நாயுடு படத்தில் நடித்து வருகிறார்.

 

இது தவிர சபாஷ் நாயுடு படத்தில் கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் இணை இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். தற்போது விஸ்வரூபம் 2 படத்தின் படப்பிடிப்பை முடித்த பிறகு எடிட்டிங் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் ட்ரைலரை தொடர்ந்து வெளியீடு தேதியையும் விரைவில் படக்குழு அறிவிக்க உள்ளது.

விஸ்வரூபம் 2 படத்தின் ட்ரைலரை ஜூன் 11இல் ஸ்ருதி ஹாசன் வெளியிட உள்ளார்.விஸ்வரூபம் 2 படத்தின் ட்ரைலரை ஜூன் 11இல் ஸ்ருதி ஹாசன் வெளியிட உள்ளார்.

தன்னுடைய அப்பா படத்தின் ட்ரைலரை வெளியிடும் ஸ்ருதி ஹாசன்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்