காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வீரருக்கு சிவகார்த்திகேயன் பரிசு

       பதிவு : Apr 23, 2018 15:09 IST    
நடிகர் சிவகார்த்திகேயன் பளுதூக்கும் வீரரான சதீஷ்குமார் சிவலிங்கம் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்தியுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் பளுதூக்கும் வீரரான சதீஷ்குமார் சிவலிங்கம் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்தியுள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தற்போது தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். இவர் தனது நண்பர் அருண்ராஜா காமராஜா இயக்கி வரும் புதுப்படம் ஒன்றை தயாரித்து வருகிறார். இவருடைய நடிப்பில் சீமராஜா மற்றும் இயக்குனர் ஆர் ரவிக்குமார் இயக்கி வரும் புது படத்திலும் நடித்து வருகிறார். இது தவிர 'OK OK' இயக்குனர் ராஜேஷ் இயக்க உள்ள புதுப்படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்ற காமன் வெல்த் போட்டியில் தங்க பதக்கம் வென்ற வீரர் சதீஷ்குமார் சிவலிங்கம் அவர்களை சந்தித்து பேசியுள்ளார். வேலூரை சேர்ந்தவரான சதீஷ்குமார் சிவலிங்கம், கடந்த காமன் வெல்த் போட்டியில் ஆடவர் 77கிலோ எடைப்பிரிவில் தங்க பதக்கத்தை வென்றுள்ளார். இவருடைய வெற்றிக்கு இந்தியா முழுவதும் குடியரசு தலைவர் முதல் தமிழக முதலமைச்சர் வரை வாழ்த்துக்கள் தெரிவித்தனர். தமிழக அரசு இவருக்கு 60 லட்சம் பரிசு அளித்துள்ளது.

 

தற்போது இவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக நடிகர் சிவகார்த்திகேயன் அவரை சந்தித்து பேசியுள்ளார். இது குறித்து சதீஷ்குமார் சிவலிங்கம் தனது டிவிட்டரில் "இன்று சிறந்த மனிதரை சந்தித்தேன். என்னுடைய காமன்வெல்த் பதக்கத்துடன் அவரை சந்தித்ததில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். அவருடைய இனிமையான வார்த்தைகள் என்னை மேலும் ஊக்கப்படுத்தியுள்ளது. திரைத்துறையில் அவருடைய கடின உழைப்பை பாராட்ட வேண்டும். நன்றி சிவகார்த்திகேயன் சார். உங்களுடைய பரிசுக்கு நன்றி" என அவர் தெரிவித்துள்ளார்.


காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வீரருக்கு சிவகார்த்திகேயன் பரிசு


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்