×

Entertainment

Technology

ads

ஏஆர் ரஹ்மானுடன் இணைந்த சிவகார்த்திகேயன் அதிகாரபூர்வ அறிவிப்பு

sivakarthikeyan new movie music director AR Rahman
sivakarthikeyan new movie music director AR Rahman

நடிகர் சிவகார்த்திகேயன்,  'வேலைக்காரன்' படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தற்போது இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மூலம் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்' போன்ற படத்திற்கு பிறகு மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். இந்த படத்தில் நடிகை சமந்தா சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இணைந்துள்ளார். இவர்களுடன் சூரி, நெப்போலியன், சிம்ரன் ஆகியோர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் நடந்து வருகிறது. இந்த படத்திற்கு 'சீம ராசா' தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. இதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் 'இன்று நேற்று நாளை' பட இயக்குனர் ரவிகுமாருடன் இணைந்துள்ளார். 'இன்று நேற்று நாளை' படம் அறிவியல் சார்ந்த படமாக இருந்ததால் ரசிகர்களின் பெருமளவு வரவேற்ப்பினை பெற்றது.

ads

சிவகாத்திகேயனின் இந்த படமும் அறிவியல் சார்ந்த படமாக இருப்பதாக கூறப்படுகிறது.  இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூருடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் மூலம் ஷ்ரத்தா கபூர் தமிழில் அறிமுகமாக உள்ளார். இந்த படத்தின் இசையமைப்பாளராக இசைபுயல் ஏஆர் ரஹ்மானிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியானது. இதனை உறுதி படுத்தும் விதமாக தற்போது '24 ஏஎம் ஸ்டுடியோஸ்' தனது டிவிட்டர் பக்கத்தில் இதற்கான அறிவிப்பை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ஏஆர் ரஹ்மானுடன் இணைந்த சிவகார்த்திகேயன் அதிகாரபூர்வ அறிவிப்பு

ads