தயாரிப்பாளரான நடிகர் சிவகார்த்திகேயனின் முதல் படைப்பு

       பதிவு : May 15, 2018 17:54 IST    
சிவகார்த்திகேயன் தனது சிவகார்த்திகேயன் ப்ரொடக்சன் நிறுவனம் சார்பில் தயாரித்து வரும் முதல் படத்திற்கு கனா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் தனது சிவகார்த்திகேயன் ப்ரொடக்சன் நிறுவனம் சார்பில் தயாரித்து வரும் முதல் படத்திற்கு கனா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

நடிகரான சிவகார்த்திகேயன் தற்போது தனது நண்பர் மற்றும் பிரபல பாடகரான அருண்ராஜா காமராஜ் படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். இந்த படம் இரண்டு பேருக்குமே முதல் படம், அதாவது சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக அறிமுகமாகும் படம் மற்றும் பாடகர் அருண்ராஜா காமராஜ் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள படம். இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் முதன் முறையாக எழுதி இயக்கி வருகிறார். இந்த படத்தில் முன்னணி நடிகரான சத்யராஜ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

முன்னதாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடுவதாக படக்குழு அறிவித்தது. இதன்படி தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பை நடிகர் மற்றும் தயாரிப்பாளரான சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் தனது சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷ்ன்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு 'கனா' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு அமைக்க இசையமைப்பாளர் திபு நிணன் தாமஸ் என்பவர் இசையமைத்து வருகிறார். 

 


தயாரிப்பாளரான நடிகர் சிவகார்த்திகேயனின் முதல் படைப்பு


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்