நயன்தாராவுக்காக பாடலாசிரியராக மாறியுள்ள நடிகர் சிவகார்த்திகேயன்

       பதிவு : May 12, 2018 15:01 IST    
முன்னதாக நடிகராக இருந்து தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருந்த நிலையில் தற்போது பாடலாசிரியராகவும் அவதாரம் எடுத்துள்ளார். முன்னதாக நடிகராக இருந்து தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருந்த நிலையில் தற்போது பாடலாசிரியராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.

சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா ஆகியோரது நடிப்பில் இறுதியாக வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்த படம் 'வேலைக்காரன்'. இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயன், நயன்தாரா ஆகியோர் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் நடிக்க உள்ளனர். இந்த படத்திற்கான பூஜை சமீபத்தில் போடப்பட்டு படப்பிடிப்பும் துவங்கப்பட்டது. இந்நிலையில் நயன்தாராவுக்காக சிவகார்த்திகேயன் பாடலாசிரியர் அவதாரம் எடுத்துள்ளார்.

தற்போது நயன்தாரா நடிப்பில் கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம் உள்ளிட்ட பல படங்கள் உருவாகி வருகிறது. இதில் கோலமாவு கோகிலா படத்தை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தை லைக்கா ப்ரொடக்சன் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகிறார். முன்னதாக அனிருத் இசையமைப்பில் இந்த படத்தின் 'எதுவரையோ' என்ற பாடல் வெளிவந்து ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

 

இதன் பிறகு இந்த படத்திலிருந்து 'கல்யாண வயசு' என்று தொடங்கும் பாடலை வரும் 17-ஆம் தேதி வெளியிட உள்ளனர். இந்த பாடல் வரிகளை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். முன்னதாக நடிகராக இருந்து தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருந்த நிலையில் தற்போது பாடலாசிரியராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.


நயன்தாராவுக்காக பாடலாசிரியராக மாறியுள்ள நடிகர் சிவகார்த்திகேயன்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்