ads

ஸ்கெட்ச் படத்தின் புது போஸ்டர் ரிலீஸ் - இசை விரைவில்

sketch movie audio release

sketch movie audio release

சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகி பொங்கலுக்கு வெளிவர உள்ள படம் 'ஸ்கெட்ச்'. இந்த படத்தின் மூலம் பல வித கெட்டப்களை மாற்றியதோடு  டப்பிங்கில் புது வித குரலையும் கையாண்டுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடெக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமன்னா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் ஸ்ரீ பிரியங்கா, சூரி முக்கிய வேடத்தில் இணைந்துள்ளனர். மேலும் மெகாலி, ராதாரவி, வேல ராமமூர்த்தி, ஸ்ரீமன், ரவி கிஷான், ஆர்கே. சுரேஷ், ஹரீஸ் பேரடி உள்பட பலர் நடித்து வருகின்றனர்.      

இந்நிலையில் படத்தின் போஸ்டர், டீசரில் வெளிவந்த சீயான் விக்ரமின் 'ஸ்கெட்ச் டைலாக்ஸ்' போன்றவை ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்கப்பட்டது. கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து அவரே வெளியிடயுள்ள இப்படத்தில் எஸ்.எஸ்.தமன் இசையமைத்துள்ளார். விஜய் சந்தர் இயக்கும்  இப்படத்தில் சுகுமார் ஒளிப்பதிவையும், ரூபன் எடிட்டிங் பணியையும் மேற்கொண்டுள்ளனர். 

இந்நிலையில் படத்தின் வெளியீட்டுக்காக எதிர்பாத்து கொண்டிருக்கும் ரசிகர்களை மகிழ்ச்சியடையும் விதமாக விரைவில் படத்தின் இசையை வெளியிடுவதாக படக்குழு அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இப்படத்தின் புது வித போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளனர்.  

sketch movie audio releasesketch movie audio release
sketch movie audio releasesketch movie audio release

ஸ்கெட்ச் படத்தின் புது போஸ்டர் ரிலீஸ் - இசை விரைவில்