ads

ஸ்டூடியோ கிரீனின் மெகா நிகழ்ச்சி வீடியோ நேரலை

studio green live mega event

studio green live mega event

பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்', நடிகர் ஆர்யாவின் 'கஜினிகாந்த்', கவுதம் கார்த்திக் நடிக்கும் 'இருட்டு அறையில் முரட்டு குத்து', அனுஸ்காவின் 'பாகமதி' போன்ற படங்களின் நிகழ்ச்சிகள் ஒரே விடியோவாக ஸ்டூடியோ கிறீன் நிறுவனம் சார்பில் தனது பேஸ்புக் தலத்தில் நேரலையாக ரசிகர்களுக்கு காண்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு உரையாடி வருகின்றனர். முன்னதாக ஆர்யாவின் 'கஜினிகாந்த்' படத்தில் இடம்பெறும் பார் பாடலின் பர்ஸ்ட் சிங்கள் வெளியிடப்பட்டது.

இதனை அடுத்து நடிகர் கவுதம் கார்த்திக் நடிக்கும் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியீடு நிகழ்ச்சி தற்போது நடந்து வருகிறது. இதில் நாயகன் கவுதம் கார்த்திக், இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர். இதனை தொடர்ந்து அனுஸ்காவின் பிரமாண்ட படமான 'பாகமதி' படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. இதனை தொடர்ந்து சூர்யாவின் நடிப்பில் பொங்கலுக்கு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் வெற்றி நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

ஸ்டூடியோ கிரீனின் மெகா நிகழ்ச்சி வீடியோ நேரலை