ads
விஜய்யின் 62வது படத்தில் இணைந்த தெலுங்கு பிரபலம்
ராதிகா (Author) Published Date : Feb 05, 2018 11:51 ISTபொழுதுபோக்கு
வலைத்தளத்தில் பரவி வரும் விஜய்யின் 62வது படத்தில் புது புது தகவல்கள் வெளிவந்த நிலையில் உள்ளது. மேலும் படத்தில் நாளுக்கு நாள் பல பிரபலங்களை இணைந்தும் வருகின்றனர். கடந்த நாட்களில் சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் வழியில் முட்டுக்காடு பகுதியில் முதல் கட்ட படப்பிடிப்பில் பாடல் காட்சிகளை படமாக்கப்பட்டது. இதனை தொடந்து இரண்டாம் கட்டமாக கொல்கத்தாவில் அதிரடி சண்டை காட்சிகளை படமாக்கப்படுவதற்கான பணியில் ஈடுபட்டு வரும் இந்நிலையில் தெலுங்கு திரையுலகின் பிரபல சண்டைப்பயிற்சி இயக்குனர்களாக (ஸ்டண்ட் மாஸ்டர்) ராம் மற்றும் லக்ஷ்மண் விஜய்யின் 62வது படத்தில் அதிரடி சண்டை காட்சிகளை வடிவமைக்க இணைந்திருப்பதாக தகவல் வந்துள்ளது. இரட்டையர்களான இவர்கள் தெலுங்கு திரையுலகில் 100க்கும் மேற்பட்ட பல படங்களில் சண்டை காட்சிகளை வடிவமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஏஆர்.முருகதாஸ் இயக்கிவரும் இப்படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளார். இவருடன் இணைந்து மற்றொரு நாயகியாக 'வனமகன்' புகழ் சயிஷா சைக்கல் இணைவிருப்பதாக தகவல் முன்னதாகவே வெளிவந்திருந்தது. இந்த தகவலின் அதிகார பூர்வ அறிவிப்பு படக்குழு இன்னும் வெளியிட வில்லை. 'சான் பிக்சர்ஸ்' தயாரிப்பு நிறுவனம் பிரமாண்டமான முறையில் தயாரித்து வரும் இப்படத்தின் சண்டை காட்சிகளை 20 நாட்களுக்குள் கொல்கத்தாவில் படமாகவுள்ளனர். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் படத்தினை தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது