ads

விஜய் 62ல் இணையும் தளபதி மகள்

vijay daughter divya singing thalapathy 62

vijay daughter divya singing thalapathy 62

இளைய தளபதி விஜய் - இயக்குனர் ஏஆர். முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் விஜய்யின் 62வது படத்தின் புது புது தகவல்கள் நாளுக்கு நாள் வெளிவந்த நிலையில் உள்ளது. கடந்த நாட்களில் முதல் கட்ட படப்பிடிப்புகளை முடிவடைந்து அடுத்த கட்டமாக அதிரடி சண்டை காட்சிகளின் படப்பிடிப்பு  கொல்கத்தா பகுதியில் நடைபெற்று வருவதாக தகவல் வந்திருந்தது. இந்நிலையில் 'இசை புயல்' ஏஆர். ரகுமான் இசைக்கு விஜய்யின் மகள் திவ்யா ஒரு பாடலை பாட வைப்பதற்கான முயற்சியில் படக்குழு இறங்கியுள்ளதாம். தற்பொழுது விஜய்யின் 62வது படத்தில் திவ்யாவை படவைப்பதற்காக பேச்சிவார்த்தை நடைபெற்று இருப்பதாக தகவல் வந்துள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான விஜய் பல படங்களில் பாடல்களை பாடி, நடிப்பினை போலவே பாடல்களை பாடுவதிலும் திறமைகளை கொண்டிருப்பதை வெளிப்படுத்தி இருக்கிறார். அது போலவே இவரது மகள் திவ்யாவும் பாடல் பாடுவதில் திறமையானவர் என்பது முன்பே வெளிவந்த தகவலின் ஒன்றாகும். இதன் காரணத்தினால் பெயரிடப்படாத விஜய்யின் 62வது படத்தில் திவ்யாவை பாடவைப்பதற்கான முயற்சியில் படக்குழு ஆர்வத்தைக்காட்டி வருகிறதாம். மேலும் இத்தகவல் வெளிவந்ததில் இருந்து விஜய்யின் ரசிகர்கள் மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர். மேலும் வெளிவந்த தகவலின் அதிகார பூர்வ அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் திவ்யா அவரது அப்பா நடிப்பில் கடந்த 2016ல் வெளிவந்த 'தெறி' படத்தின் இறுதிக்கட்ட காட்சியின் மூலம் திரையுலகில் அறிமுகமானாது குறிப்பிடத்தக்கது.

விஜய் 62ல் இணையும் தளபதி மகள்

  Tags :  , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,