விஜய்யின் 62வது படத்தில் இணையும் வனமகன் புகழ்

       பதிவு : Jan 24, 2018 12:18 IST    
vijay 62 jained as sayesha saigal vijay 62 jained as sayesha saigal

தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வெகுவாக பரவி வரும் விஜய்யின் 62வது படத்தில் நாளுக்கு நாள் புது புது கலைஞர்கள் மற்றும் நடிகர் - நடிகைகள் இணைந்து வருகின்றனர். இந்நிலையில் 'வனமகன்' புகழ் சயிஷா சைகள் விஜய்யின் 62வது படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தில் விஜய் இரண்டு வேடத்தில் நடிப்பதாக தகவல் முன்னதாகவே வெளிவந்திருந்தது. இதில் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து மற்றொரு நாயகியாக சயிஷா சைகள் நடிக்கவுள்ளார்.

இவர் முதல் முதலில் ஜெயம் ரவியுடன் இணைந்து 'வனமகன்' படத்தில் காட்டுவாசியின் உணர்வை புரிந்து நாயகனுக்கு ஆதரவு தரும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து ரசிகர்கள் மத்தியிலும் திரைதுறை வட்டாரத்திடமும் வெகுவான வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் பெற்றிருந்தார். மேலும் இப்படத்தில் இவரது நடனத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.

 

இந்நிலையில் விஜய்யின் 62வது படத்தில் நடிக்கவிருக்கும் சாயிஷாவின் நடிப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் இன்றிருந்தே எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது. மேலும் சாயிஷா விஜய்யின் 62வது படத்தில் கடந்த கால நிகழ்வு, மாற்று திறனாளி விஜய்யின் மனைவி, கடந்த காலத்தை எடுத்து சொல்லும் கதாபாத்திரம் போன்ற கேரக்டரில் சாயிஷா நடிக்கலாம் என ரசிகர்கள் மத்தியில் பல கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.   

இவர் 'அஃகில்' என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் ஹிந்தியில் 'ஷிவாய்' என்ற படத்தில் நடித்ததை தொடர்ந்து தமிழில் 'வனமகன்' படத்தில் அறிமுகமானார். தற்பொழுது விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் ஜூங்கா, கார்த்தியின் கடை குட்டி சிங்கம், ஆர்யாவின் கஜினிகாந்த் போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.        

 


விஜய்யின் 62வது படத்தில் இணையும் வனமகன் புகழ்


செய்தியாளர் பற்றி

விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்களிலும் அதிகளவு ஆர்வம் உடையவர். தற்பொழுது மக்களிடையே நிலவி வரும் சமூக வலைதளம், சினிமா தொடர் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். அரசியல் சார்ந்த செய்திகளை அடியோடு வெறுப்பவர். சில நேரங்களில் ஓவியம் வரைதல், சிறந்த நாவல்களை படித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். கடவுள் நம்பிக்கை உடையவர். நாளுக்கு நாள் வெளிவரும் புது புது சினிமா (திரைப்படம் ) சார்ந்த செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்பவர். ... மேலும் படிக்க

ratiga

ராதிகாஎழுத்தாளர்