ads

விஜய்யின் 63வது படத்தினை தயாரிக்கவுள்ள பிரபல நிறுவனம்

vijay to act in super good films

vijay to act in super good films

விஜய் தனது 62வது படத்தினை ஏஆர். முருகதாஸ் கூட்டணியில் உருவாக்கி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு துவங்கப்பட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முதல் கட்ட ஷூட்டிங்கை படக்குழு நிறைவடைந்து விட்டது. இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கொல்கத்தா பகுதியில் எடுப்பதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்நிலையில் விஜய்யின் 63வது படம் குறித்து தகவல் வந்துள்ளது. இந்த தகவலில் விஜய்யின் 63வது படத்தினை புகழ் பெற்ற 'சூப்பர் குட் ஃபிலிம்ஸ்' தயாரிப்பு நிறுவனம் பிரமாண்டமான முறையில் தயாரிக்கவுள்ளதாம். இந்த நிறுவனம் இதற்கு முன்னதாகவே விஜய் நடிப்பில் வெளிவந்த பூவே உனக்காக, லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும், திருப்பாச்சி, ஜில்லா போன்ற வெற்றி படங்களை தயாரித்திருப்பது குறிப்பிட்டத்தக்கது.

சிறந்த திரைக்கதைகளை கொண்டு பிரமாண்டமான முறையில் தயாரித்து பல வெற்றி படங்களை கொடுக்கும் திறமை கொண்ட 'சூப்பர் குட் ஃபிலிம்ஸ்' தயாரிப்பு நிறுவனம் இதுவரை தமிழ் மற்றும் தெலுங்கில் சுமார் 90க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளது. இந்த நிறுவனம் தயாரித்திருந்த விஜய்யின் 'பூவே உனக்காக' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று விஜய்க்கு ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தித்தந்தது. மேலும் இந்நிறுவனம் இறுதியாக விஜய்யின் 'ஜில்லா' படத்தினை இயக்கி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. இந்நிலையில் 100வது படத்தினை தயாரிக்கவுள்ள சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி சவுத்ரி, விஜய்யை அனுகியுள்ளார். இதன் மூலம் விஜய்யின் 63வது படத்தினை இந்நிறுவனம் தயாரிக்க வாய்ப்புகள் இருக்கிறது. இந்த தகவலின் அதிகார பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்யின் 63வது படத்தினை தயாரிக்கவுள்ள பிரபல நிறுவனம்