ads

ஜூன் 7இல் உலகமெங்கும் வெளியாகவுள்ள சூப்பர் ஸ்டாரின் காலா

காலா படத்தின் வெளியீடு தேதி குறித்த அறிவிப்பை இந்த படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் வெளியிட்டுள்ளார்.

காலா படத்தின் வெளியீடு தேதி குறித்த அறிவிப்பை இந்த படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் வெளியிட்டுள்ளார்.

சூப்பர் ஸ்டார் நடிப்பில் அதிரடியாக உருவாகியுள்ள படம் 'காலா'. இந்த படத்தை இயக்குனர் பா ரஞ்சித் 'கபாலி' படத்தை தொடர்ந்து இயக்கி உள்ளார். இந்த படத்தை சூப்பர் ஸ்டாரின் மருமகனான தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். இந்த படத்தில் ரஜினிக்கு மனைவி கதாபாத்திரத்தில் நடிகை ஈஸ்வரி நடித்துள்ளார். முன்னதாக இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது. இதனை அடுத்து இந்த படம் வரும் ஏப்ரல் 27-இல் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

ஆனால் மார்ச் 1-ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த தயாரிப்பாளர் வேலை நிறுத்தம் ஒன்றரை மாதத்திற்கு மேலாக நீடித்ததால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இதன் பிறகு தயாரிப்பாளர் பிரச்சனை ஒரு வழியாக நிறைவடைந்த பிறகு முதல் படமாக 'மெர்குரி' வெளியாகியுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து ஏராளமான கிடப்பில் போடப்பட்ட புதிய படங்கள் அடுத்த இரண்டு மாதங்களுக்கு வெளியாக உள்ளது. தயாரிப்பாளர் பிரச்சனையால் முன்னதாகவே வெளியாக இருந்த தமிழ் படங்கள் வெளியாகாததால் ஒரு மலை போல் குவிந்துள்ளது.

இதனால் ஏப்ரல் 27-இல் வெளியாக இருந்த 'காலா' எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது. சமீபத்தில் இந்த படம் ஜூன் 15இல் ரம்ஜானை முன்னிட்டு வெளியாக இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் இந்த படத்தின் வெளியீடு தேதி குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன்படி இந்த படம் வரும் ஜூன் மாதம் 7-ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

ஜூன் 7இல் உலகமெங்கும் வெளியாகவுள்ள சூப்பர் ஸ்டாரின் காலா