தீபாவளிக்கு என்ஜிகே வெளியீடு உறுதி செய்த சூர்யா

       பதிவு : Jun 04, 2018 17:00 IST    
இரண்டாம் உலகம் படத்திற்கு பிறகு இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் மன்னவன் வந்தானடி, நெஞ்சம் மறப்பதில்லை, என்ஜிகே போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இதில் சூர்யாவின் என்ஜிகே படம் தீபாவளியில் வெளிவர உள்ளது. இரண்டாம் உலகம் படத்திற்கு பிறகு இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் மன்னவன் வந்தானடி, நெஞ்சம் மறப்பதில்லை, என்ஜிகே போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இதில் சூர்யாவின் என்ஜிகே படம் தீபாவளியில் வெளிவர உள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் 'NGK - நந்த கோபால குமரன்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் என இரு நாயகிகள் முதன் முறையாக இணைந்து நடித்து வருகின்றனர். இரண்டாம் உலகம் படத்திற்கு பிறகு என்ஜிகே படத்தை இயக்குனர் செல்வராகவன் இயக்கி வருகிறார். இவருடைய இயக்கத்தில் உருவாகியுள்ள மன்னவன் வந்தானடி, நெஞ்சம் மறப்பதில்லை போன்ற படங்கள் சில காரணங்களால் தாமதமாகி கொண்டு செல்வதால் சூர்யாவை வைத்து என்ஜிகே படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படம் சமூக கருத்துள்ள அரசியல் சார்ந்த படமாக உருவாகி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருள் ஒருவரான சூர்யா, முதன் முறையாக அரசியல் சார்ந்த படத்தில் நடித்து வருகிறார். சமூக அக்கறையுடன் உருவாகி வரும் இந்த படம் மூலம் சூர்யா மீது பொது மக்களிடம் நல்ல மதிப்பினை பெறுவார் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

 

இந்த படத்தில் சூர்யா மற்றும் சாய் பல்லவி ஆகியோரது காட்சிகள் படமாக்கப்பட்டு வரும் நிலையில் சமீபத்தில் பொள்ளாச்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சூர்யா 'என்ஜிகே' படம் வரும் தீபாவளி வெளிவருவதை உறுதி செய்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் 25 நாட்கள் மட்டுமே மீதமுள்ளது. இதனை முடித்தவுடன் விரைவில் போஸ்ட் ப்ரொடக்சன் பணிகளில் படக்குழு களமிறங்கவுள்ளது. அருவி படத்தை தொடர்ந்து ட்ரீம் வாரியர்ஸ் பிக்ச்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது.


தீபாவளிக்கு என்ஜிகே வெளியீடு உறுதி செய்த சூர்யா


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்