சூர்யாவின் 'பீலா பீலா' பாடல் டீசரின் சாதனை

       பதிவு : Dec 25, 2017 13:00 IST    
peela peela song teaser peela peela song teaser

நானும் ரௌடிதான் படத்தின் வெற்றியை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பொங்கலுக்கு வெளிவர உள்ள படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. இந்த படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர், டீசர், இசை போன்றவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. மேலும் ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், செந்தில், நந்தா, ஆர்ஜே.பாலாஜி, தம்பி ராமையா, சத்யன் உட்பட பல திரையுலக நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர். மேலும் நவரச நாயகன் கார்த்திக் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தினை தெலுங்கில் காங் என்ற தலைப்பில் வெளியிட உள்ளனர்.

படத்தின் அனைத்து வித டப்பிங் பணிகளையும் நிறைவடைந்து விட்டதாக படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் சில நாட்களுக்கு முன்பு அவரது ட்விட்டரில் பதிவு செய்து தகவலை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இந்த படத்தில் இருந்து கடந்த நாட்களில் வெளிவந்த 'பீலா பீலா'  பாடல் 24மணி நேரத்தில் 1மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனையை படைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தில் தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில் ஈடுபட அனிருத் இசையை மேற்கொண்டிருந்தார். 

 


சூர்யாவின் 'பீலா பீலா' பாடல் டீசரின் சாதனை


செய்தியாளர் பற்றி

மோகன், சிறு வயதிலிருந்தே அறிவாளியாக திகழும் இவர் கணிதத்தில் நன்கு திறமை வாய்ந்தவராவார். இவர் தனது திறமையால் பல பாராட்டுகளை பெற்றவர். கற்றல் மற்றும் கற்பித்தலில் வல்லவராக திகழும் இவர் மிகவும் பின்தங்கிய குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். ... மேலும் படிக்க

Mohan

மோகன்ராஜ்எழுத்தாளர்