ads

ட்ரீம் வாரியர்ஸ் அறிவித்த சூர்யா 36 படத்தின் தகவல்

surya 36 movie updates

surya 36 movie updates

சூர்யா நடிப்பில் பொங்கலுக்கு வெளிவர உள்ள படம் தானா சேர்ந்த கூட்டம். இந்த படத்தினை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். இதில் கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், செந்தில், நந்தா, ஆர்ஜே.பாலாஜி, தம்பி ராமையா, சத்யன் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தில் நவரச நாயகன் கார்த்திக் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் இருந்து வெளிவந்த பாடல், போஸ்டர், டீசர் போன்றவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றதோடு படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

இந்த படம் பொங்கலுக்கு ரசிகர்கள் விருந்தாக அமையவுள்ளது. இதனை தொடர்ந்து சூர்யா அடுத்ததாக ஆயிரத்தில் ஒருவன், யாரடி நீ மோகினி, மயக்கம் என்ன போன்ற படங்களை இயக்கிய செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்ச்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கவுள்ளார். இதனை அடுத்து சூர்யா 36 படத்தின் முக்கிய தகவலை இன்று மாலை 5 மணிக்கு வெளியிடுவதாக படக்குழு தெரிவித்தது. அதன்படி நடிகை சாய் பல்லவி நடிகர் சூர்யாவின் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வ தகவலை ட்ரீம் வாரியர்ஸ் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ட்ரீம் வாரியர்ஸ் அறிவித்த சூர்யா 36 படத்தின் தகவல்