ads
தானா சேர்ந்த கூட்டம் படத்தின் - தெலுங்கு டீசர்
மீனா ஸ்ரீ (Author) Published Date : Dec 12, 2017 17:55 ISTபொழுதுபோக்கு
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடெக்சன் பணியில் படக்குழு விறுவிறுப்பாக இறங்கியுள்ளது. இந்த படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து ரம்யா கிருஷ்னன், செந்தில்,நந்தா, ஆர்கே. சுரேஷ், சதிஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். மேலும் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளிவரவுள்ள இந்த படத்திற்கு தெலுங்கில் 'கேங்' என்ற தலைப்பினை வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழில் வெளிவந்த போஸ்டர், இசை, டீசர் போன்றவை உலகளவில் ட்ரெண்ட்டானது. இதில் டீசர் விவேகம் படத்தின் ட்ரெண்ட்டை முறியடித்து இருப்பது குறிப்பிட்ட தக்கது. இதில் தெலுங்கு திரையுலகிற்கு பர்ஸ்ட் லுக் போஸ்டர், இசை வெளியிட்ட படக்குழு நாளை முதல் டீசரையும் வெளியிடுவதாக தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் தமிழ் திரையுலகில் வெளிவந்து ட்ரெண்டானதை விட தெலுங்கில் அதிகளவு ட்ரெண்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.