ads

சூர்யாவின் கேங் தெலுங்கு படத்தின் சிட்டிகே பாடல் டீசர்

surya in gang movie chitike teaser

surya in gang movie chitike teaser

நானும் ரவுடி தான் படத்தின் வெற்றியை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பொங்கலுக்கு வெளிவர உள்ள படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. இந்த படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படத்தில் முக்கிய வேடமான வில்லன் கெட்டப்பில் நவரச நாயகன் கார்த்திக் நடித்துள்ளார். இவருடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், செந்தில், நந்தா, ஆர்ஜே.பாலாஜி, தம்பி ராமையா, சத்யன் உட்பட பல திரைப்பட நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர். 

அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை தெலுங்கில் 'கேங்' என்ற தலைப்பில் வெளியிட உள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு இரண்டு மொழியிலும் ஒரே நாளில் ஜனவரி 12-இல் வெளியிடுகின்றனர். முன்னதாக தமிழில் இந்த படத்தின்  போஸ்டர், டீசர், பாடல்கள் போன்றவை வெளிவந்து ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. தற்போது தெலுங்கில் 'கேங்' என்ற தலைப்பில் வெளிவரவுள்ள இந்த படத்தின் 'சிட்டிகே' என்ற பாடலின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

சூர்யாவின் கேங் தெலுங்கு படத்தின் சிட்டிகே பாடல் டீசர்