ஏஞ்சலினா பஸ்ட் லுக்

       பதிவு : Nov 10, 2017 09:38 IST    
ஏஞ்சலினா பஸ்ட் லுக்

சுசீந்திரன் இயக்கத்தில் நெஞ்சில் துணிவிருந்தால் படம் இன்று வெளிவர உள்ளது. இந்நிலையில் இந்த படத்தினை தொடர்ந்து ஏஞ்சலினா படத்தினை சுசீந்திரன் இயக்கிவந்தார். இவர் இயக்கும் படங்கள் அனைத்தும் பொதுவானதாகவும் ரசிகர்களை எளிதில் சென்றடையும் விதத்திலும் இருக்கும். அதன் அடிப்படையில் எடுத்து வந்த ஏஞ்சலினா படம் இறுதி நிலையை அடைந்துள்ளது.

'ஆதலால் காதல் செய்வீர்' படங்களை போன்று புதுமுகங்களை கொண்டு எடுக்கப்பட்ட ஏஞ்சலினா படத்தின் போஸ்டர் முன்னதாகவே சுசீந்திரன் பெற்றோர்களின் முன்னிலையில் வெளியிடப்பட்டது. தியாகு எழுதிய பாடலின் வரிகளுக்கு 'விக்ரம் வேதா' படத்திற்கு இசையமைத்த சாம் சி எஸ் இசையமைக்க, ஷோபி ஒளிப்பதிவு பணியில் ஈடுபட்டுள்ளார்.  

 

முழுக்க முழுக்க கல்லூரி மாணவர்களை சுற்றி நடக்கும் கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சூரி நடித்துள்ளார். இந்நிலையில் இன்று எந்த வித தகவலும்மின்றி அதிகார பூர்வமாக இப்படத்தின் பஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.


ஏஞ்சலினா பஸ்ட் லுக்


செய்தியாளர் பற்றி

மோகன், சிறு வயதிலிருந்தே அறிவாளியாக திகழும் இவர் கணிதத்தில் நன்கு திறமை வாய்ந்தவராவார். இவர் தனது திறமையால் பல பாராட்டுகளை பெற்றவர். கற்றல் மற்றும் கற்பித்தலில் வல்லவராக திகழும் இவர் மிகவும் பின்தங்கிய குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். ... மேலும் படிக்க

Mohan

மோகன்ராஜ்எழுத்தாளர்