சீனு ராமசாமி படத்தில் வங்கி ஊழியராக நடிக்கும் தமன்னா

       பதிவு : Mar 15, 2018 11:28 IST    
தமன்னா தர்மதுரை படத்திற்கு பிறகு சீனு ராமசாமியுடன் கண்ணே கலைமானே படத்தில் இணைந்துள்ளார். தமன்னா தர்மதுரை படத்திற்கு பிறகு சீனு ராமசாமியுடன் கண்ணே கலைமானே படத்தில் இணைந்துள்ளார்.

'தர்மதுரை' படத்திற்கு பிறகு இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் தற்போது கண்ணே கலைமானே, இடம் பொருள் ஏவல் போன்ற படங்கள் உருவாகி வருகிறது. சீனு ராமசாமி இயக்கத்தில் இறுதியாக வெளியான 'தர்மதுரை' படம் 100 நாட்களை கடந்த மாபெரும் வெற்றி பெற்றது. இதன் பிறகு தமிழ் திரைத்துறையில் இயக்குனர் சீனு ராமசாமி படத்திற்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்புகள் பலமாகவே அதிகரித்துள்ளது.

இவருடைய இயக்கத்தில், நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் 'கண்ணே கலைமானே'. இந்த படத்தில் நடிகை தமன்னா உதயநிதிக்கு ஜோடியாக இணைந்துள்ளார். இந்த படத்தின் மூலம் தமன்னா சீனு ராமசாமி படத்தில் இரண்டாவது முறையாக இணைந்துள்ளார். முன்னதாக வெளிவந்த தர்மதுரை படத்தில் தமன்னா கதாபாத்திரம் அனைவராலும் பேசப்பட்டது.

 

இதனை தொடர்ந்து தற்போது உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்துள்ள தமன்னா இந்த படத்தில் வங்கி ஊழியராக நடித்துள்ளார். மும்முரமாக நடைபெற்ற இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக இயக்குனர் சீனு ராமசாமி தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இது குறித்து நடிகை தமன்னா கூறும் போது "இந்த படத்தில் சீனு ராமசாமி என்னை வங்கி ஊழியராக காண்பித்துள்ளார். இந்த படத்தில் ரொம்பவே அழுத்தமான கதாபாத்திரம் இது.

தர்மதுரை படத்தை போலவே இந்த படத்திலும் எமோஷனல் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளார். மதுரையில் நடக்கும் கதையாக உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்தது. என்னுடைய காட்சிகளை முடித்த பிறகு படக்குழுவை விட்டு பிரிய மனமில்லை. அந்த அளவிற்கு சீனு ராமசாமி படத்தில் நடிப்பது எனக்கு இன்பமான அனுபவம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

கண்ணே கலைமானே படத்தில் தமன்னா வங்கி ஊழியர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.கண்ணே கலைமானே படத்தில் தமன்னா வங்கி ஊழியர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சீனு ராமசாமி படத்தில் வங்கி ஊழியராக நடிக்கும் தமன்னா


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்