ads

உதயநிதி ஸ்டாலினின் கண்ணே கலைமானே படப்பிடிப்பு ஆரம்பம்

kanney kalaimaney movie shooting stills

kanney kalaimaney movie shooting stills

இயக்குனர் சீனு ராமசாமி 'கண்ணே கலைமானே' என்ற புது படத்தை இயக்க உள்ளார். இந்த படத்திற்கு நாயகனாக நடிகர் மற்றும் தயாரிப்பாளரான உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ளார். இவருடைய நடிப்பில் இயக்குனர் பிரியதர்சன் இயக்கத்தில் தற்போது 'நிமிர்' படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து தற்போது இயக்குனர் சீனு ராமசாமி இயக்கும் 'கண்ணே கலைமானே' படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தில் இவருக்கு நாயகியாக நடிகை தமன்னா நடிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த படத்தின் மூலம் நடிகர் உதயநிதி மற்றும் தமன்னா ஆகியோர் முதன் முறையாக இணைகின்றனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் கதையை முழுவதும் எழுதி முடித்திருப்பதாகவும் இந்த படத்தின் முதல் பாடலை கவிஞர் வைரமுத்து எழுதி முடித்திருப்பதாகவும் சமீபத்தில் இயக்குனர் சீனு ராமசாமி தெரிவித்தார். இந்நிலையில் தற்போது இந்த படத்தின் பூஜை போடப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரையில் தற்போது தொடங்கியுள்ளது. இதற்கான புகைப்படங்களை படக்குழு சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளது. விரைவில் இந்த படத்தில் பணி புரியவுள்ள இதர தொழில் நுட்ப கலைஞர்கள் குறித்த செய்தியை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

kanney kalaimaney movie shooting stillskanney kalaimaney movie shooting stills
kanney kalaimaney movie shooting stillskanney kalaimaney movie shooting stills

உதயநிதி ஸ்டாலினின் கண்ணே கலைமானே படப்பிடிப்பு ஆரம்பம்