ads

அட்லீ இயக்கத்தில் பாகுபலி நாயகன்

atlee join with prabhas

atlee join with prabhas

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளிவந்த படம் 'மெர்சல்'. இந்த படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்து இலவச மருத்துவம், ஜி.எஸ்.டி வரி போன்றவற்றை மையமாக வைத்து பல வசனத்தை கையாண்டு ரசிகர்களிடம் மாபெரும் வெற்றியை பெற்றிருந்தார். இந்த வசனத்தின் காரணத்தினால் அரசியல் சார்ந்த சிலரிடமிருந்த பலத்த எதிர்ப்புகள் ஏற்பட்டும் ரசிகர்கள் மத்தியில் வெகுவான வெற்றியை பெற்றிருந்தது. இந்த படம் தெலுங்கிலும் 'அதிரந்தி' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது.     

இந்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் அட்லீ பாகுபலி நாயகன் பிரபாஸுடன் இணையவிருப்பதாக தகவல் வந்துள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகரான பிரபாஸ் பாகுபலி படத்தின் மூலம் முதல் முறையாக தமிழில் அறிமுகமானார். அறிமுக படத்திலையே தமிழ் திரையுலகில் நல்ல வெற்றியை பெற்றிருந்தார். இந்த வெற்றியினை தொடர்ந்து நடிகர் பிரபாஸ் தற்பொழுது இயக்குனர் சுஜித் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் உருவாகிவரும் 'சாஹோ' படத்தில் நடித்து வருகிறார்.  

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவந்த பிறகு இயக்குனர் அட்லீ இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. இருந்தும் எந்த வித தகவலையும் இதுவரை படக்குழு வெளியிடவில்லை.        

 

அட்லீ இயக்கத்தில் பாகுபலி நாயகன்